Home Auto News

பழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பு – சாலைப் போக்குவரத்து துறை

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பழைய வாகனங்களுக்கு பசுமை வரி அல்லது மாசு உமிழ்வு வரி (Green Tax or pollution tax) விதித்துள்ளது.

பசுமை வரி விதிப்பு பட்டியல் முழுவிபரம்

வாகனத்தை தகுதி சான்றிதழ் புதுப்பிக்கப்படும் ஒவ்வொரு முறையும் பசுமை வரி விதிக்கப்படும் என உறுதிப்படுத்தியுள்ளது.

1. 8 வருடத்திற்கு மேற்பட்ட போக்குவரத்து வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் புதுப்பிக்கப்படும் போது, சாலை வரியுடன் கூடுதலாக 10-25 சதவீதம் என்ற விகிதத்தில் பசுமை வரி வசூலிக்கப்டும்.

2. தனிநபர் வாகனங்களுக்கு 15 ஆண்டுகளுக்குப் பிறகு தகுதி சான்றிதழ் புதுப்பிக்கப்படும் போது, சாலை வரியுடன் கூடுதலாக 10-25 சதவீதம் என்ற விகிதத்தில் பசுமை வரி வசூலிக்கப்டும்.

3. பொதுப் போக்குவரத்து பேருந்துகளுக்கு மிக குறைந்த பசுமை வரி விதிக்கப்படும்.

4. அதிக மாசுபட்ட நகரங்களில் பதிவு செய்யப்படும் வாகனங்கள் மீது கணிசமாக அதிக பசுமை வரி (சாலை வரியின் 50%) விதிக்கப்படும்.

5. எரிபொருள் (பெட்ரோல் / டீசல்) மற்றும் வாகன வகையை கருத்தில் கொண்டு வேறுபட்ட வரி வசூலிக்கப்படும்.

6. ஹைபிரிட், மின்சார வாகனங்கள் மற்றும் சி.என்.ஜி, எத்தனால், எல்.பி.ஜி பயன்படுத்தும் மாற்று எரிபொருள் வாகனங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.

7. டிராக்டர், அறுவடை இயந்திரம் ஆகியவற்றுடன் விவசாயத்தில் பயன்படுத்தப்படும் விவசாய வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் பசுமை வரியிலிருந்து கிடைக்கும் வருவாய் ஒரு தனி கணக்கில் வைக்கப்பட்டு மாசுபாட்டைக் கையாள்வதற்கும், மாநிலங்கள் உமிழ்வு கண்காணிப்புக்கு அதிநவீன வசதிகளை அமைப்பதற்கும் பயன்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளது.

மேலும், 15 வருடத்திற்கு மேற்பட்ட அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்களை பதிவு ரத்து செய்தல் மற்றும் அகற்றும் கொள்கைக்கு சாலை போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இது ஏப்ரல் 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும்.

Exit mobile version