Automobile Tamilan

ஜிஎஸ்டி 2.0 பலன்கள்., ரூ.3.49 லட்சம் வரை விலை குறையும் டொயோட்டா கார்கள்

toyota legender neodrive 48v

டொயோட்டா இந்தியாவின் பிரசத்தி பெற்ற ஃபார்ச்சூனர், இன்னோவா என அனைத்து மாடல்களும் ரூ.48,700 முதல் அதிகபட்சமாக ரூ.3.49 லட்சம் வரை ஜிஎஸ்டி குறைப்பின் காரணமாக சலுகைகள் செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

ஜிஎஸ்டி 2.0 எதிரொலியால் இந்திய ஆட்டோமொபைல் உலகில் மிகப்பெரும் விலை குறைப்பு சாத்தியப்படுத்தி வருகின்றது. குறிப்பாக சிறிய கார்களுக்கு 18 % மற்றவைக்கு 40 % வரி பிரிவு உள்ளதால் கிளான்ஸா, டைசோர் கார்களுக்கு 18 % மற்ற டொயோட்டா மாடல்களுக்கு 40 % ஆக மாறியுள்ளது.

குறிப்பாக டொயோட்டாவின் ஃபார்ச்சூனர் மாடலின் டாப் வேரியண்ட் விலை ரூ.3.49 லட்சம் வரையும், அடுத்தப்படியாக லெஜெண்டர் எஸ்யூவிக்கு ரூ.3,34,000 வரை குறைய உள்ளது. அடுத்தப்படியாக ரீபேட்ஜிங் மாடலாக உள்ள கிளான்ஸா ரூ.85,300 ஆகவும், ரூமியன் விலை ரூ.48,700 ஆகவும், ஹைரடருக்கு ரூ.65,800 வரை குறைய உள்ளது.

Model Reduction in Price
Glanza Up to INR 85,300
Taisor Up to INR 1,11,100
Rumion Up to INR 48,700
Hyryder Up to INR 65,400
Crysta Up to INR 1,80,600
Hycross Up to INR 1,15,800
Fortuner Up to INR 3,49,000
Legender Up to INR 3,34,000
Hilux Up to INR 2,52,700
Camry Up to INR 1,01,800
Vellfire Up to INR 2,78,000

குறிப்பாக இந்தியாவின் பிரசத்தி பெற்ற டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா மற்றும் இன்னோவா ஹைக்ராஸ் முறையே ரூ.1.80 லட்சம் முதல் ரூ.1.15 லட்சம் வரை குறைய உள்ளது. கேம்ரி மற்றும் வெல்ஃபயர் போன்ற மாடல்களும் விலை குறைய உள்ளது.

முழுமையான அட்டவனை மேலே கொடுக்கப்பட்டுள்ளது. முன்பாக ரெனால்ட், மஹிந்திரா, டாடா உள்ளிட்ட நிறுவனங்கள் விலை குறைப்பு விபரங்களை தெளிவுப்படுத்தி நிலையில் டொயோட்டாவும் இணைந்துள்ளது.

Exit mobile version