Automobile Tamilan

டஸ்ட்டர் வெளியீட்டு தேதியை அறிவித்த ரெனால்ட் இந்தியா

renault duster suv launch

வரும் 77வது குடியரசு தினம் 26-01-2026ல் அதிகாரப்பூர்வமாக ரெனால்ட் டஸ்ட்டர் எஸ்யூவியை இந்தியாவில் விற்பனைக்கு வெளியாக உள்ளதை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மிகவும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

2012ல் முதன்முறையாக இந்தியாவில் வெளியிடப்பட்ட டஸ்ட்டர் எஸ்யூவி சிறப்பான வரவேற்பினை பெற்று 2,00,000 கூடுதலான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ள நிலையில், சர்வதேச அளவில் 18 லட்சத்துக்கும் கூடுதலான யூனிட்டுகளை விற்றுள்ளது.

2026 Renault Duster

இந்திய சந்தைக்கான மாடலின் இன்டீரியர் சர்வதேச மாடல்களை விட மாறுபட்ட டிசைன் பெற்று இரட்டை செட்டப் கொண்டதாகவும் டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை கொண்டிருக்கலாம்.

புதிய மாடலும் CMF-B பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள டஸ்ட்டரில் முரட்டுத்தனமான தோற்றத்தை வெளிப்படுத்தும் கிரிலுடன் மத்தியில் Renault எழுத்துகள் வழங்கப்பட்டு மிக நேர்த்தியான கிரில் அமைப்பு என ஒட்டுமொத்தமாக மிகுந்த வலிமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது மிகப்பெரிய அளவில் எஸ்யூவி ரசிகர்களை ஈர்க்கின்றது.

பெரிய 18 அங்குல டைமண்ட் கட் அலாய் வீலுடன் நேர்த்தியான ஸ்டைலிங் கோடுகளை பெற்றதாகவும், பின்புறத்தில் Y  வடிவ எல்இடி டெயில் லைட் பெற்று நேர்த்தியான பம்பரை கொண்டுள்ளது.

புதிய ரெனால்ட் டஸ்ட்டரில் உங்கள் அனைத்து உடைமைகளுக்கும் உகந்த லக்கேஜ் இடவசதியைப் பெறுங்கள், 520 லிட்டர் வரை இடமும், 60/40 ஸ்பிலிட்-ஃபோல்டு பின்புற இருக்கைகளை மடிக்கும்போது 1,635 லிட்டர் வரை இடமும் கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளது.

டஸ்ட்டரில் உள்ள என்ஜின் விபரம்: 120hp, 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல், 140hp, 1.2-லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் மற்றும் 170hp, 1.3-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆனது ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் ஆதரவான என்ஜினாக உள்ளது. ஒரு சில நாடுகளை பொறுத்து என்ஜின் தேர்வு மாறுபடும் இந்திய சந்தைக்கான என்ஜின் பற்றி உறுதியாக தகவல் தற்பொழுது இல்லை.

லெவல்  2 ADAS, ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற 4×2 மற்றும் 4×4 என இரு விதமான டிரைவ் ஆப்ஷனும் விற்பனைக்கு ஜனவரி 26, 2026ல் வரவுள்ளது. இந்த மாடலுக்கு போட்டியாக ஹூண்டய் கிரெட்டா,  விக்டோரிஸ், எலிவேட், மாருதி கிராண்ட் விட்டாரா, ஹைரைடர், டாடா கர்வ், மற்றும் கியா செல்டோஸ் உள்ளன.

Exit mobile version