Automobile Tamilan

₹ 5.35 லட்சத்தில் ஸ்வராஜ் டார்கெட் டிராக்டர் விற்பனைக்கு வெளியானது

swaraj target

மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் கீழ் செயல்படும் ஸ்வராஜ் டிராக்டர் நிறுவனம் டார்கெட் என்ற பெயரில் குறைந்த எடை கொண்ட டிராக்டர் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்வராஜ் டார்கட் காம்பாக்ட் லைட் வெயிட் டிராக்டர் பிரிவில், ஒப்பிடமுடியாத செயல்திறன், முதல் வகுப்பு அம்சங்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் ஆகியவற்றை கொண்ட மாடலாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Swaraj Target Tractor

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய டிராக்டர் தயாரிப்பாளரான ஸ்வராஜ் டிராக்டர்ஸ் நிறுவனம், அதி நவீன வசதிகள் பெற்ற புதிய பிளாட்ஃபாரத்தில் வடிவமைத்துள்ள  20-30 HP (14.91 – 22.37kW) பிரிவில் டார்கெட் 630 மற்றும் டார்கெட் 625 என இரண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்வராஜ் டார்கெட் 630 டிராக்டர் முதலில் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் உள்ள ஸ்வராஜின் டீலர் நெட்வொர்க் மூலம் கிடைக்கும். டார்கெட் 630 விலை ₹ 5.35 லட்சம் ஆகும்.

ஸ்வராஜ் டார்கெட் 630 மாடலில் DI இன்ஜின் அதிகபட்சமாக 87 Nm டார்க் மற்றும் 2,800rpm-ல் 24 ஹெச்பி ஆற்றலுடன், டிராக்டர் அதன் வகுப்பில் மிக உயர்ந்த PTO சக்தியை வழங்குகிறது.  மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட இரட்டை விசிறி தெளிப்பான்கள் வழியாக ஒரே மாதிரியான தெளிக்கும் திறன் கொண்டது.

இது மிகவும் சேறும் சகதியுமான நிலப்பரப்பில் 800 லிட்டர் வரை ட்ரைல்ட் ஸ்ப்ரேயர்களை இழுக்க முடியும். இதில் உள்ள ஒற்றை உலர் கிளட்ச் மற்றும் டிரான்ஸ்மிஷன் மெக்கானிக்கல் சின்க்ரோமேஷ் மற்றும் 9 ஃபார்வேட் மற்றும் 3 ரிவர்ஸ் வேகத்துடன் வெட் கிளட்ச் ஆகியவற்றை பெறுகிறது.

மேம்பட்ட தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம், புதிய மேம்பட்ட ஆபரேட்டர் வசதியை வழங்குகிறது, மென்மையான கியர் ஷிப்ட்களுக்கான சின்க்ரோமேஷ் கியர் பாக்ஸ் போன்ற தனித்துவமான தொழில்நுட்ப அம்சத்தின் மூலம் கார் போன்ற அனுபவத்தை வழங்கும் என குறிப்பிட்டுள்ளது.

அதே நேரத்தில் ஆபரேட்டருக்கு இலகுவாக பல கருவிகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அதன் மிகக் குறுகிய பாதை அகலம் மற்றும் குறைந்த டர்னிங் ரேடியஸ் ஆகியவை விவசாயிகள் குறுகலான இடங்களுக்கு சிரமமின்றி பயணிக்க அனுமதிக்கின்றன.

Target மாடல் ஸ்வராஜ் நிறுவனத்தின் ஒரு பெரிய தயாரிப்பு மறுசீரமைப்பின் ஒரு பகுதியாகும், எதிர்காலத்தில் மின்சார மற்றும் டிரைவரில்லாமல் இயங்கும் தானியங்கி டிராக்டர் உட்பட பல வகைகளுக்கு ஐந்து புதிய தளங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. தயாரிப்பினை விரிவுபடுத்துவதை தவிர, மூன்றாவது உற்பத்தி வசதியை அமைக்கும் செயலிலும், அடுத்த இரண்டு காலாண்டுகளில் நடைமுறைக்கு வரும்.

Exit mobile version