Automobile Tamilan

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு 100% வரிச்சலுகை – தமிழ்நாடு அரசு

air-ev

சுற்றுசூழலை பாதுகாக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு பேட்டரி மூலம் இயங்கும் அனைத்து விதமான வாகனங்களுக்கும் 100 சதவீத வரி விலக்கு 2025 ஆண்டு வரை வழங்க அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2019-க்கு இணங்க பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்து ஆணையரகமும் கேட்டுக்கொண்டது.

இந்தநிலையில் 01.01.2023 முதல் 31.12.2025 வரை பேட்டரியால் இயக்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் 100 சதவீத வரி விலக்கு அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு நிதித் துறையின் ஒப்புதல் தேவையில்லை எனவும், தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் வரிவிதிப்புச் சட்டம், 1974 பிரிவு 20 மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி அனைத்து பேட்டரி வாகனங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version