Automobile Tamilan

627 கிமீ ரேஞ்ச்., டாடா Harrier.EV QWD சிறப்புகள் மற்றும் முக்கிய விபரங்கள்.!

tata harrier.ev stealth

65KWh மற்றும் 75Kwh என இரு விதமான பேட்டரி ஆப்ஷனுடன் டாடா ஹாரியர்.EV எஸ்யூவி ஆரம்ப விலை ரூ.21.49 லட்சம் முதல் துவங்குகின்ற நிலையில் டாப் மாடலில் QWD எனப்படுகின்ற ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் 120Kw DC விரைவு சார்ஜர் ஆதரவினை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு சார்ந்த வசதிகளில் BNCAP மற்றும் GNCAP 5 நட்சத்திர ஆதரவுக்கு 7 ஏர்பேக்குகள் (6 ஸ்டாண்டர்டு மற்றும் கூடுதல் முழங்கால் பகுதிக்கான ஏர்பேக்) மற்றும் அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகளுடன் லெவல் 2 ADAS ஆதரவுடன் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆட்டோ ஹோல்டுடன் அமைந்துள்ளது.

65kwh பேட்டரி ஆப்ஷனை பற்றி முழுவிபரங்களை வெளியிடாத நிலையில் சில அடிப்படையான தகவல்களை 75Kwh பேட்டரி பற்றி தகவலை வெளியிட்டுருந்த நிலையில் பின் வருமாறு;-,

மற்ற வசதிகளில் பல்வேறு நவீன பெற்ற இன்டீரியர் உலகின் முதல் 14.53 அங்குல ஹர்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் சாம்சங் நியோ QLED டிஸ்பிளே வழங்கப்பட்டு பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை கொண்டதாக வந்துள்ளது.

ஒளிரும் வகையிலான டாடா லோகோ பெற்ற 4 ஸ்போக் கொண்ட ஸ்டீயரிங் வீலுடன் பனோரமிக் சன்ரூஃப், காற்றோட்டமான முன் இருக்கைகள், டால்பி அட்மாஸ் 5.1 உடன் 10 பிளாக் ஸ்பீக்கர் JBL, வாகனத்திலிருந்து ஏற்றுதல் (V2L) மற்றும் வாகனத்திலிருந்து வாகனத்திற்கு (V2V) செயல்பாடு கொண்டுள்ளது.

ஆஃப் ரோடு சாகசங்களில் 540 டிகிரி சரவுண்ட் வியூ கேமரா மூலம் டிரான்ஸ்பரன்ட் மோடு (Transparent Mode) மூலம் வாகனத்தின் அடியில் உள்ளவற்றையும் அறிந்து கொள்ளலாம். 502 லிட்டர் பூட் ஸ்பேஸ், 999 லிட்டர் வரை விரிவாக்கலாம். முன்புறத்தில் 35 லிட்டர் ஃபிரன்க் ஸ்டோரேஜ் உள்ளது.

Harrier.EV காரில் நைனிடால் நாக்டர்ன், எம்பவர்டு ஆக்சைடு, ப்ரிஸ்டைன் ஒயிட் மற்றும் ப்யூர் கிரே ஆகிய வண்ணங்களிலும், கூடுதலாக ஸ்டெல்த் எடிசனும் மற்றும்  Normal, Grass/Snow, Mud/Gravel, Sand, Rock Crawl, Custom என 6 விதமான டெர்ரையின் மோடுகள் உள்ளன.

ஜூலை 2ஆம் தேதி முதல் முன்பதிவு துவங்கப்பட உள்ள நிலையில் டாடா ஹாரியர்.இவி விலை பட்டியல் வரும் நாட்களில் வெளியாகும்.

Exit mobile version