இந்தியாவில் டெஸ்லா ஆலை அமையும்..! – எலான் மஸ்க்

அமெரிக்காவின் பிரசத்தி பெற்ற மின்சார கார் தயாரிப்பாளரான டெஸ்லா நிறுவனம் இந்திய சந்தையில் நுழைவதற்கான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கியுள்ளாதால் விரைவில் இது தொடர்பான அதிகார்வப்பூர்வ அறிக்கை வெளியாகலாம்.

இந்தியாவில் டெஸ்லா

இந்த வருடத்தின் தொடக்கம் முதலே டெஸ்லா இந்தியா வருகை குறித்து பல்வேறு விதமான கேள்விகளை ட்விட்டர் தளங்களில் பதிவாகி வருகின்ற நிலையில் சில வாரங்களுக்கு முன்னதாக உள்ளூர் உற்பத்தி கட்டாயம் என்றிருந்தால் மட்டுமே விற்பனை செய்யப்படும் என தவறாக புரிந்து கொண்டதற்கு விளக்கமளித்திருந்த மேக் இன் இந்தியா டிவிட்டர் செய்தியை தொடர்ந்து இன்று ஜஸ்வீர் சிங் என்வரின் கேள்விக்கு எலான் மஸ்க் தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இதன் டிவிட்டர் விபரம் கீழே வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற கார்களுக்கு பல்வேறு விதமான வரி முறை உள்ள நிலையில் முழுமையாக கட்டமைக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படுகின்ற கார்களுக்கு 100 – 120 சதவிகித வரி விதிப்பு நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

எனவே இதனை டெஸ்லா நிறுவனத்துக்கு மட்டும் தற்காலிகமாக அதாவது உள்நாட்டில் தொழிற்சாலை அமைக்கும் வரை இறக்குமதி வரியில் திருத்தங்களை கோரியுள்ளதாக எலான் மஸ்க் ட்விட் செய்துள்ளார். எனவே எலான் கருத்தின் அடிப்படையில் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

சமீபத்தில் மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த மஹிந்திரா அவர்கள் தனது டிவிட்டரில் டெஸ்லா வருகைக்கு ஆதரவு தெரிவித்து தனது டிவிட்டை வெளியிட்டிருந்தார் என்பது இங்கே குறிப்பிடதக்கதாகும்.

Exit mobile version