• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

4 சர்வதேச அறிமுகம் உட்பட 26 மாடல்களை வெளியிடும் டாடா மோட்டார்ஸ்

by MR.Durai
10 January 2020, 8:39 pm
in Auto Expo 2023
0
ShareTweetSend

hornbill suv

2020 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், நான்கு சர்வதேச அறிமுகங்கள் உட்பட 14 பயணிகள் வாகனங்கள், 12 வர்த்தக வாகனங்கள் என மொத்தமாக 26 வாகனங்களை CESS என்ற தீம் கான்செப்ட் கொண்டு வெளியிட உள்ளது.

1 . டாடா ஹார்ன்பில்

ரூ. 5 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகின்ற ஹார்ன்பில் அல்லது H2x என அழைக்கப்படுகின்ற இந்த மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு 5 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்று வரவுள்ள இந்த காரின் உற்பத்தி நிலை மாடல் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. ரெனோ க்விட், மாருதி எஸ் பிரெஸ்ஸா மற்றும் மஹிந்திரா கேயூவி100 காரையும் எதிர்கொள்ள உள்ளது.

2. டாடா க்ராவிட்டாஸ்

7 சீட்டர் எஸ்யூவி காராக க்ராவிட்டாஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் விற்பனைக்கு அடுத்த சில மாதங்களில் வெளியிடப்பட உள்ளது. 2.0 லிட்டர் கிரையோடெக் டீசல் என்ஜின் மிகவும் சக்திவாய்ந்த, பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணக்கமானதாக பொருத்தப்பட்டிருக்கும். இது 170 ஹெச்பி மற்றும் 350 என்எம் டார்க்கை உற்பத்தி செய்யும். கிராவிடாஸிற்கான டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் 6 வேக மேனுவல் மற்றும் ஹூண்டாய் மூலமாக 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகியவை அடங்கும்.

முதன்முறையாக இந்த மாடல் பஸ்ஸாரடு என்ற பெயரில் 2019 ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தியது. டாடா க்ராவிடாஸ் விலை ஹாரியரை விட ரூ.1 -1.50 லட்சம் அதிகமாக ரூ. 16 லட்சம் முதல் ரூ.20 லட்சத்திற்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

3. டாடா பிளாக்பேர்ட் எஸ்யூவி

பிளாக்பேர்ட் எஸ்யூவி மாடல் இந்நிறுவனத்தின் சீன கூட்டணி நிறுவனமான செர்ரி மோட்டார்ஸ் நிறுவனத்தின்  பிளாட்ஃபாமில் வடிவமைக்கப்பட உள்ள எஸ்யூவி ஆகும்.

4. டாடா நெக்ஸான்

ஃபேஸ்லிஃப்ட் டாடா நெக்ஸான் எஸ்யூவி உட்பட டிகோர் போன்ற மாடல்களுடன் பிஎஸ் 6 என்ஜின் பெற்ற அனைத்து வாகனங்களும் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

 

2020 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிப்படுத்துவதனை தொடர்ந்து விற்பனைக்கு வெளியாகலாம். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் CESS என்ற நோக்கத்தில் தனது கார்களை வெளியிட உள்ளது. CESS என்றால் Connected, Electric, Shared மற்றும் Safe ஆகும். 12 பயணிகள் வாகனம், 14 வர்த்தக வாகனங்கள் என மொத்தமாக 26 வாகனங்களை வெளியிட உள்ளது.

Tags: Tata AltrozTata h2x
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

கியா EV9 எலெக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் அறிமுகம் : ஆட்டோ எக்ஸ்போ 2023

ஆட்டோ எக்ஸ்போ 2023: கியா KA4 (கார்னிவல்) அறிமுகம்

550 கிமீ ரேஞ்சு.., மாருதி சுசூகி eVX EV எஸ்யூவி கான்செப்ட் அறிமுகம் : Auto Expo 2023

டாடா சஃபாரி, ஹாரியர் எலெக்ட்ரிக் எஸ்யூவி டீசர் வெளியீடு – Auto Expo 2023

புதிய 16 சீட்டர் டாடா மோட்டார்ஸ் விங்கர் வெளியானது – ஆட்டோ எக்ஸ்போ 2020

டாடாவின் எலெக்ட்ரிக் டிரக் அல்ட்ரா T7 EV அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2020

ஆட்டோ எக்ஸ்போவில் டாடா வெளியிட்ட புதிய ப்ரிமா டிரக்குகள் அறிமுகம்

ஆட்டோ எக்ஸ்போவில் ஹெய்மா 8 எஸ் எஸ்யூவி காட்சிக்கு வந்தது

Haima 7X: ஹெய்மா 7எக்ஸ் எம்பிவி கார் வெளியானது – ஆட்டோ எக்ஸ்போ 2020

2021-ல் விற்பனைக்கு வரும் டாடா அல்ட்ராஸ் இவி மின்சார கார் அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2020

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version