Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 427

Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 428
ஆட்டோ எக்ஸ்போவில் ஹெய்மா 8 எஸ் எஸ்யூவி காட்சிக்கு வந்தது | Automobile Tamilan

ஆட்டோ எக்ஸ்போவில் ஹெய்மா 8 எஸ் எஸ்யூவி காட்சிக்கு வந்தது

haima 8s

இந்தியாவின் நடுத்தர அளவிலான எஸ்யூவி சந்தையில் வரவுள்ள ஹெய்மா 8 எஸ் மாடல் 2022 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வெளியாகலாம். நடுத்தர எஸ்யூவி பிரிவு மிக கடுமையான போட்டியாளர்களை கொண்டதாக மாறி வருகின்றது.

இந்நிறுவனம் இ1 இவி மின்சார கார் மற்றும் 8எஸ் எஸ்யூவி காரையும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியுள்ளது. First Automobile Works (FAW Group) எனப்படுகின்ற சீன அரசு சார்பு நிறுவனமாக செயல்படுகின்ற ஆரம்ப காலங்களில் ஹைய்மா ஆட்டோமொபைல் பிராண்டில் மஸ்தா நிறுவன கார்களை ரீபேட்ஜ் செய்து விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது இந்நிறுவனம் சொந்தமாக கார்களை உற்பத்தி செய்து வருகின்றது. ஆரம்ப காலங்களில் மஸ்டா பிளாட்ஃபாரம் அடிப்படையில் கார்களை வடிவமைத்த இந்நிறுவனம் இப்பொழுது தனது ஹைய்மா சர்வதேச பிளாட்ஃபாரத்தை சொந்தாமாக உருவாக்கி எஸ்யூவி முதல் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து வருகின்றது. பெரும்பாலும் இப்போதும் மஸ்டா கார்களின் நுட்பங்களை சார்ந்தே உள்ளது.

ஐந்து இருக்கைகள் கொண்ட எஸ்யூவி முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பெரிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் மொத்தம் ஐந்து ஏசி வென்ட்களை டாஷில் கொண்டுள்ளது. 8S காரில் பெரிய பனோரமிக் சன்ரூஃப் உள்ளது.

ஹெய்மா ஆட்டோமொபைல் 8 எஸ் மாடலில் 5 சீட்டர் காரில் 1.6 லிட்டர் டி-ஜிடிஐ எஞ்சின் மூலம் 193 ஹெச்பி பவர் மற்றும் 293 என்எம் டார்க்கை வழங்குகின்றது. மேலும், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 0-100 கிமீ வேகத்தை 8 வினாடிகளுக்குள் எட்டிவிடும். அதே எஞ்சின் ஹெய்மா 7 எக்ஸ் மாடலில் உள்ளது.

கியா செல்டோஸ், கிரெட்டா மற்றும் எம்.ஜி. ஹெக்டர் உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ளும் திறனை கொண்டதாக விளங்குகின்றது.

Exit mobile version