• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

by MR.Durai
15 July 2026, 11:36 am
in Car News
0
ShareTweetSend

New 2026 maruti suzuki brezza facelift

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி, தனது பிரபலமான 4 மீட்டருக்கு குறைந்த நீளமுள்ள காம்பாக்ட் எஸ்யூவி மாடலான பிரெஸ்ஸாவின் புதிய ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ள நிலையில் விலை மற்றும் முழுமையான விபரங்களை ஜூலை 24 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

புதிய பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் காரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் ரூ. 11,000 டோக்கன் அட்வான்ஸ் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். நாடு முழுவதும் உள்ள மாருதியின் அதிகாரப்பூர்வ அரினா ஷோரூம்கள் மூலமாகவோ, அல்லது மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலமாகவோ ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.

2026 Brezzaவில் என்ன எதிர்பார்க்கலாம்.?

  • தற்போதைய 1.5-லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்ஜினுடன் சேர்த்து, முதன்முறையாக 1.0-லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போ-பெட்ரோல் 100hp மற்றும் 148Nm வெளிப்படுத்தும் வகையில் இதில் அறிமுகம் செய்யப்படவுள்ளது ( ஃபிரான்க்ஸ் காரில் உள்ள அதே இன்ஜின் ஆகும்).
  • வழக்கமான சிஎன்ஜி கார்களில் பூட் ஸ்பேஸ் முழுவதையும் சிலிண்டர் அடைத்துக் கொள்ளும். ஆனால், புதிய பிரெஸ்ஸா சிஎன்ஜி மாடலில் காரின் அடிப்பகுதியில் (Underbody) சிஎன்ஜி டேங்க் பொருத்தப்பட வாய்ப்புள்ளது. இதனால் டிக்ஸியில் தாராளமாகப் பொருட்களை வைக்க இடம் கிடைக்கும்.
  • புதிய வடிவமைப்பு கொண்ட முன்பக்க மற்றும் பின்பக்க பம்பருடன் மாற்றியமைக்கப்பட்ட எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் டெயில் லைட்டுகள், புதிய டிசைனில் வரும் 4-ஸ்போக் டைமண்ட்-கட் அலாய் வீல் பெறக்கூடும்.
  • புதிய யூசர் இன்டர்ஃபேஸ் கொண்ட பெரிய 10.1-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டச்ஸ்கிரீன் உடன் பிரீமியம் லெதரெட் சீட்டுகள் மற்றும் இந்தியாவில் நிலவும் வெயில் காலத்திற்கு ஏற்ற வென்டிலேட்டட் ஃபிரண்ட் சீட்டுகள் இடம்பெறக்கூடும்.
  • லெவல் 2 அடாஸ் (Level 2 ADAS) பாதுகாப்பு தொழில்நுட்பம், 360-டிகிரி கேமரா மற்றும் முன்பக்க பார்க்கிங் சென்சார்கள் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 2026 மாருதி பிரெஸ்ஸாவுக்கு போட்டியாக சந்தையில் உள்ள டாடா நெக்ஸான் , ஹூண்டாய் வென்யூ, கியா சோனட் , மஹிந்திரா XUV 3XO மற்றும் ஸ்கோடா கைலாக் போன்ற காம்பாக்ட் எஸ்யூவிகளுக்குக் கடுமையான போட்டியாக அமையும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 8.50 லட்சம் முதல் ரூ. 14 லட்சம் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Maruti Suzuki Brezza
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version