Automobile Tamil

ரெனோ க்விட் 1 லிட்டர் என்ஜின் , ஏஎம்டி அறிமுகம் – Auto Expo 2016

பிரசத்தி பெற்ற ரெனோ க்விட் காரின் அதிக ஆற்றலை வழங்கும் 1.0 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்ட மாடல் மற்றும் ஏஎம்டி மாடல் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 ( Auto Expo 2016 ) கண்காட்சியில் பார்வைக்கு வந்துள்ளது.

renault-kwid-racer

 

விற்பனைக்கு  வந்த 4 மாதங்களில் 1 லட்சம் முன்பதிவுகளை கடந்துள்ள க்விட் ஹேட்ச்பேக் காரின் கூடுதல் ஆற்றல் வழங்கும் மாடலில் 800சிசி என்ஜினுக்கு மாற்றாக 1.0 லிட்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்றபடி தோற்றத்தில் எந்த மாற்றங்களும் இல்லை.

புதிய 1.0 SCe (Smart Control efficiency) 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆற்றல் மற்றும் டார்க் விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை . ஏஎம்டி ஆப்ஷனிலும் க்விட் வரவுள்ளது. இதில் 5 வேக மெனுவல் மற்றும் 5 வேக ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

தற்பொழுது விற்பனையில் உள்ள க்விட் காரில் 53Bhp ஆற்றலை வழங்கும் 800சிசி பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 72 Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. விற்பனைக்கு வரவுள்ள 1.0 லிட்டர் என்ஜின் ஆற்றல் 75Bhp தொடுவதற்கு வாய்ப்புள்ளது.

[envira-gallery id="7139"]

Exit mobile version