ட்ரையம்ப் த்ரக்ஸ்டன் R பைக் விற்பனைக்கு வந்தது

ட்ரையம்ப் போனிவில் வரிசை பைக்குகளுல் புதிய ட்ரையம்ப் த்ரக்ஸ்டன்  R பைக்  ரூ.10.90 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போ வாயிலாக இந்திய சந்தைக்கு பார்வைக்கு வந்தது.

ட்ரையம்ப் போனிவில் T120 பைக்கில் இருந்து சற்று கூடுதலான வசதிகளை பெற்றுள்ளது. குறிப்பான பியராலோ டிப்போலோ ரோஸா டயர் அலுமினிய ஸ்வின்கிராம் , புகைப்போக்கில் பிரஸ்டூ ஸ்ட்யின்லெஸ் ஸ்டீல் போன்றவை ஆகும்.

த்ரக்ஸ்டன் பைக்கில் 112என்எம் ஆற்றலை வெளிப்படுத்தும்  1200சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  இதில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. முந்தைய மாடலை விட 62 சதவீத வரை டார்க் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ட்வீன் ஃபுளோட்டிங் பிரெம்போ டிஸ்க் பிரேக் ,  முன்பக்கத்தில் ஃபுல்லி அட்ஜெஸ்டபிள் ஷோவா ஃபோர்க்குகள் , பின்புறத்தில்  ஃபுல்லி அட்ஜெஸ்டபிள் ட்வீன் சாக் அப்சார்களை பெற்றுள்ளது. பைரேலி டிபோலோ கோரஸா டயர்கள் மேலும் எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்கு , எல்இடி டெயில் விளக்கு ,  டிராக்‌ஷன் கன்ட்ரோல் ,  ஏபிஎஸ் , சிலிப் அசிஸ்ட் கிளட்ச் , யூஎஸ்பி சார்ஜ் சாக்கெட் போன்றவற்றை பெற்றுள்ளது.

ட்ரையம்ப் போனிவில் பைக்குகள் விலை பட்டியல் 

ட்ரையம்ப் த்ரக்ஸ்டன்  R பைக் விலை ரூ.10.90 லட்சம் ( எக்ஸ்ஷோரூம் டெல்லி )

 

Exit mobile version