
ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம், 160cc சந்தையில் புதிதாக SP160 பைக் விற்பனைக்கு தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். தற்பொழுது 160சிசி சந்தையில் எக்ஸ்-பிளேடு மற்றும் யூனிகார்ன் என இரு மாடல்களை விற்பனை செய்து வருகின்றது.
160சிசி சந்தையில் ஸ்போர்ட்டிவ் பிரிவில் டிவிஎஸ் அப்பாச்சி 160, பல்சர் என்எஸ் 160, பல்சர் P160, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் , ஜிக்ஸர் மற்றும் யமஹா FZ-Fi V4 Dlx ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் எஸ்பி 160 அறிமுகம் செய்யப்பட உள்ளது.
தற்பொழுது ஹோண்டா நிறுவனம் ஷைன் 125 அடிப்படையில் ஷைன் 100 பைக், டியோ 110 மாடலை அடிப்படையாக கொண்ட டியோ 125 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது 125சிசி சந்தையில் கிடைக்கின்ற எஸ்பி 125 பைக்கின் வெற்றியை 160சிசி சந்தையில் பெற இதன் ஸ்டைலிங் அமைப்புகளை பயன்படுத்தி எஸ்பி 160 என்ற பெயரில் வெளியிட திட்டமிட்டுள்ளது.
யூனிகார்ன் 160 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள OBD2 மற்றும் E20 எரிபொருளுக்கு ஏற்றதாக தயாரிக்கப்பட்டுள்ள HET (Honda Eco Technology) நுட்பத்தினை பெற்று 162.71cc என்ஜின் அதிகபட்சமாக 7,500rpm-ல் 12.9 hp பவர், 14 NM டார்க் ஆனது 5500rpm-ல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கபட்டுள்ளது.
இந்த என்ஜினை அடிப்படையாக கொண்டிருக்கலாம் என கூறப்படும் நிலையில், பவர் மற்றும் டார்க் அதிகரிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. போட்டியாளர்கள் 14.5hp கூடுதலாக பவரை வெளிப்படுத்து வருகின்றன. யமஹா FZ-Fi V4 மாடலுக்கு நேரடியான சவாலினை ஏற்படுத்தலாம்.
17 அங்குல வீல் பெற்று இருபக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் கொண்ட வேரியண்ட் மற்றும் பின்புறத்தில் டிரம் பெற்ற குறைந்த விலை வேரியண்ட் என இரண்டு விதமாக வெளியிடப்படலாம்.
தற்பொழுது ஹோண்டா யூனிகார்ன் 160 பைக்கின் விலை ரூ.1.10 லட்சத்தில் கிடைக்கின்ற நிலையில் புதிய ஹோண்டா SP 160 பைக்கின் விலை ரூ.1.15 லட்சத்தில் துவங்கலாம்.