Categories: Bike News

2017 பஜாஜ் பல்சர் 150 பைக் விற்பனைக்கு வந்தது

மேம்படுத்தப்பட்ட 2017 பஜாஜ் பல்சர் 150 பைக் ரூ. 75,284 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல்சர் 150 பைக்கில் சிறிய அளவில் தோற்ற மாற்றங்கள் மற்றும் புதிய லேசர் எட்ஜ்டு கிராபிக்ஸ் பெற்றுள்ளது.

 

2017 லேசர் எட்ஜ்டு டிசைன் நுட்பத்தை கொண்டு புதுப்பிக்கப்பட்டுள்ள பல்சர் 150 பைக்கில் புதிய பாடி கிராபிக்ஸ் , மேம்படுத்தப்பட்ட இன்ஸ்டுரூமென்ட் கிளஸ்ட்டர் டிசைன் மற்றும் இருக்கையின் அமைப்பில் மேம்பாடு பெற்று நெடுந்தொலைவு பயணத்துக்கு ஏற்றதாக அமையும் , லேசர் எட்ஜ் கிராபிக்ஸ் போன்றவற்றை பெற்றுள்ளது.

2017 பஜாஜ் பல்சர் 150 என்ஜின்

புதிய பல்சர் 220 , 135 , 180 பைக்குகள் பிஎஸ்4 என்ஜின் பெற்றுள்ள நிலையில் பல்சர் 150 முந்தைய 150சிசி பிஎஸ்3 என்ஜினே பொருத்தப்பட்டுள்ளது. 15.06 ஹெச்பி பவர் மற்றும் 12.5 நியூட்டன்மீட்டர் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

முன்பக்க டயரில் 240மிமீ டிஸ்க் மற்றும் பின்பக்க டயரில் 130மிமீ டிரம் பிரேக் இடம்பெற்றுள்ளது. முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்பக்கத்தில் நைட்ராக்ஸ் சாக் அப்சார்பரினை பெற்று விளங்குகின்றது.

2017 பஜாஜ் பல்சர் 150 பைக் விலை ரூ.75,284 ஆகும். (விலை எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு) முந்தைய மாடலை விட ரூ.750 வரை பல்சர் 150 பைக் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

2017 பஜாஜ் பல்சர் 150 படங்கள்

 

Recent Posts

பஸால்டின் இன்டீரியர் டீசரை வெளியிட்ட சிட்ரன்

சிட்ரன் இந்தியாவின் C-Cube திட்டத்தின் கீழ் வெளியிட உள்ள 4வது மாடலான பஸால்ட் (Citroen Basalt) கூபே எஸ்யூவி ஆகஸ்ட்…

1 day ago

குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் அறிமுகத்தை உறுதி செய்த நிசான்

அடுத்த 2025-2026 நிதியாண்டின் இறுதிக்குள் இந்திய சந்தையில் நிசான் நிறுவனம் குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் உட்பட 4 கார்களை…

1 day ago

நிசான் X-Trail 2024 பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை

ரூ.36 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகின்ற நிசானின் 2024 X-Trail எஸ்யூவி மாடலுக்கு ஜூலை 26 ஆம் தேதி முன்பதிவு துவங்கப்பட உள்ள…

1 day ago

ஆகஸ்ட் 15., மஹிந்திரா தார் ராக்ஸ் எஸ்யூவி அறிமுகமாகின்றது

சந்தையில் கிடைக்கின்ற மூன்று கதவுகளை கொண்ட தார் எஸ்யூவி காரின் அடிப்படையில் தார் ராக்ஸ் (THAR ROXX) என்ற பெயரினை…

3 days ago

ஹீரோவின் சக்திவாய்ந்த எக்ஸ்பல்ஸ் 210 அறிமுகம் எப்பொழுது.?

இந்தியாவின் குறைந்த விலை அட்வென்ச்சர் ரக மாடாலாக வரவுள்ள மிகவும் மேம்பட்ட ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்பல்ஸ் 210 பைக்கினைஅடுத்த…

3 days ago

ஃப்ளிப்கார்டில் பஜாஜ் பைக்குகள் விற்பனை துவங்கியது

இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் வலைதளமான ப்ளிப்கார்ட்டில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அனைத்து மோட்டார் சைக்கிள்களும் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக…

3 days ago