• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

2023ல் விற்பனைக்கு வந்த பைக் மற்றும் ஸ்கூட்டர்கள்

by MR.Durai
30 December 2023, 5:11 pm
in Bike News
0
ShareTweetSend

best two wheeler launches 2023

இந்திய சந்தையில் 2023 ஆம் ஆண்டில் புதிய மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், பல்வேறு ஃபேஸ்லிஃப்ட் மாடல்களும் கூடுதல் வசதி பெற்ற பைக்குகளும் சந்தைக்கு வந்துள்ளன.

குறிப்பாக 350-500சிசி பிரிவில் மிகப்பெரிய வரவாக புதிய புல்லட் 350, ஹிமாலயன் 450, ஹார்லி-டேவிட்சன் X440, டிவிஎஸ் அப்பாச்சி RTR 310, டிரையம்ப் ஸ்பீடு 400, ஸ்கிராம்பளர் 400 X, ஏப்ரிலியா RS457, புதிய கேடிஎம் 390 டியூக், புதிய ஹோண்டா சிபி 350 மற்றும் யமஹா R3, MT-03 ஆகியவற்றுடன் கரீஸ்மா XMR கூடுதலாக ஸ்கூட்டர் பிரிவில் ஜூம் 110, ஆக்டிவா ஸ்மார்ட் கீ, டியோ 125, உட்பட பல்வேறு மாடல்கள் வந்துள்ளன.

மேலும் படிக்க – 2023ல் வந்த எலக்ட்ரிக் பைக் மற்றும் ஸ்கூட்டர் விபரம்

RE Bullet 350

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் மிகவும் பழமையான மோட்டார்சைக்கிளை புதுப்பிக்கப்பட்டு வந்துள்ள புல்லட் 350 பைக்கில் 20hp பவர் மற்றும் 27Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் ஆனது கொண்டிருக்கின்றது.

RE Himalayan 450

புதிய செர்பா 452 என்ஜினை பெற்று வந்துள்ள ஹிமாலயன் 450 பைக்கில் 452cc ஒற்றை சிலிண்டர் 4 வால்வுகளுடன் கூடிய DOHC லிக்யூடு கூல்டு என்ஜின் ஆனது அதிகபட்சமாக 8,000 rpm-ல் 40 bhp பவர் மற்றும் 5,000 rpm-ல் 40 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் இடம்பெற்றுள்ளது.

Harley-Davidson X440

ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹார்லி-டேவிட்சன் கூட்டணியில் உருவான முதல் மாடலான X440 பைக்கில் ஏர்-ஆயில் கூல்டு என்ஜின் 6000 rpm-ல் 27 bhp பவர் மற்றும் 38 Nm at 4000rpm டார்க் வழங்கும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

TVS Apache RTR 310

டிவிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ கூட்டணியில் உருவான 313சிசி என்ஜின் பெற்று வந்துள்ள ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் பெற்ற நேக்டூ RTR 310 பைக்கில்  312.12cc என்ஜின் ஸ்போர்ட், சூப்பர் மோட்டோ மற்றும் டிராக் மோடில் 9,700 rpm-ல் 35.6 bhp பவர் மற்றும் 6,650 rpm-ல் 28.7 Nm டார்க் வழங்குகின்றது. அர்பன், ரெயின் மோடில் 7,500 rpm-ல் 27.1 bhp பவர்  மற்றும் 6,600 rpm-ல் 27.3 Nm டார்க் வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு சிலிப்பர் கிளட்ச் அசிஸ்ட் பொருத்தப்பட்டிருக்கின்றது.

Triumph Speed 400/Scrambler 400X

பஜாஜ் மற்றும் டிரையம்ப் கூட்டணியில் உருவான முதல் பைக் மாடலான ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400 X என இரு பைக்கிலும் பொதுவாக 398.15cc DOHC சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு என்ஜின் 8,000 rpm-ல் 40 hp பவரையும், 6,500 rpm-ல் 37.5 Nm டார்க். இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

Aprilia RS 457

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற ஏப்ரிலியா RS457 பைக்கில் பேரலல் ட்வீன் சிலிண்டர் என்ஜின் பெற்று  இரட்டை கேம்ஷாஃப்ட் டைமிங் கொண்டு ஒவ்வொரு சிலிண்டருக்கு நான்கு வால்வுகளை பெற்று அதிகபட்சமாக 47 hp பவர் வெளிப்படுத்துகின்றது.

Yamaha R3/MT03

இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக யமஹா R3 மற்றும் MT03 என இரண்டும் ஒரே என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்றது.  321cc பேரலல் ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய 10.750 rpm-ல் அதிகபட்ச குதிரைத்திறன் 40.4 bhp, மற்றும் 9.000 rpm-ல் 29.4 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

Hero Karizma XMR 210

மீண்டும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கரீஸ்மா XMR 210 விற்பனைக்கு  வெளியிடப்பட்டுள்ளது.  210cc லிக்யூடு கூல்டு என்ஜின் DOHC (Double Overhead Camshaft) அமைப்பினை பெற்று 9250rpm-ல் 25.5 hp பவர் மற்றும் 7,250rpm-ல் 20.5 Nm டார்க் வெளிப்படுத்தலாம். இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் பொருத்தப்பட்டுள்ளது.

Hero Xoom 110

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய ஜூம் 110 ஸ்கூட்டர் துவக்கநிலை ஸ்போர்ட்டிவ் மாடலாக அமோக வரவேற்பினை தந்துள்ளது.  7250 ஆர்பிஎம்மில் 8 பிஎச்பி பவர், 5750 ஆர்பிஎம்மில் 8.7 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இந்த ஸ்கூட்டர் i3s இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் செயல்பாடு மற்றும் USB சார்ஜிங் போர்ட் ஆகியவற்றையும் பெறுகிறது.

Honda SP160

ஹோண்டாவின் எஸ்பி125 மாடலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள SP160 பைக்கில் 162.71cc என்ஜின் அதிகபட்சமாக 7,500rpm-ல் 13.5 hp பவர், 14.6 NM டார்க் ஆனது 5500rpm-ல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கபட்டுள்ளது.

Hero Xtreme 160R 4V

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்ட்ரீம் 160R 4V ஆனது 160சிசி சந்தையில் மிக வேகமான மாடலாக வந்துள்ள நிலையில், பல்வேறு சிறப்புகளை பெற்று 163.2cc ஏர்-ஆயில் கூல்டூ என்ஜின் அதிகபட்சமாக 8500rpm-ல் 16.9 hp பவர் மற்றும் 6500rpm-ல் 14.5 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

Bajaj Pulsar N150

பஜாஜ் ஆட்டோ பல்சர் வரிசையில் N160 பைக்கின் ஸ்போர்ட்டிவ் ஸ்டைலிங் நேரடியாக பகிர்ந்து கொள்ளுகின்ற புதிய பல்சர் N150 பைக்கில் 150cc என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 14.5hp பவர் மற்றும் 13.5Nm டார்க் வெளிப்படுத்தும் இதில் 5 ஸ்பீட் கியர்பாக்ஸ் பெறுகிறது.

பஜாஜ் பல்சர் என்150 பைக் விலை ரூ.1.18 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) ஆகும்.

Honda Activa Smart Key

துவக்க நிலை சந்தையில் முதன்மையான மாடலாக உள்ள ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் பெரிய அளவில் டிசைன் மேம்பாடுகள் இல்லையென்றாலும் கூடுதலாக இடம்பெற்ற ஸ்மார்ட் கீ பெற்று ரீமோட் மூலம் ஆன் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

Tags: Harley-Davidson X440Royal Enfield Bullet 350Royal Enfield Himalayan 450Triumph Speed 400
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version