• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

2023 ஹோண்டா CD 110 ட்ரீம் டீலக்ஸ் பைக் விற்பனைக்கு வெளியானது

by MR.Durai
11 August 2023, 3:57 pm
in Bike News
0
ShareTweetSend

2023 Honda CD110 Dream

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் OBD-2 மற்றும் E20 மேம்பாடு கொண்ட புதிய 2023 ஹோண்டா CD 110 ட்ரீம் டீலக்ஸ் பைக்கினை ரூ.73,400 விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. முந்தைய மாடலை போலவே தோற்ற அமைப்பில் எந்த மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ளது.

சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா எஸ்பி 160 பைக்கினை தொடர்ந்து புதிய சிடி 110 ட்ரீம் பைக் ஆனது விற்பனைக்கு வெளியாகியுள்ளது. மேலும் சில வாரங்களுக்கு முன்பாக பட்ஜெட் விலையில் ஷைன் 100 பைக் வெளியானது.

2023 Honda CD110 Dream Deluxe

இந்திய சந்தையில் கிடைக்கின்ற 110சிசி மாடல்களான பேஷன் பிளஸ், பேஷன் எக்ஸ்டெக், டிவிஎஸ் ரேடியான , ஸ்டார் சிட்டி உள்ளிட்ட மாடல்களுடன் லிவோ ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்ற சிடி 110 டீரிம் டீலக்ஸ் பைக்கில் OBD-2 மற்றும் E20 மேம்பாடு பெற்ற 109.51cc ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 7500rpm-ல் 8.67 hp பவர் மற்றும் 9.30 Nm at 5500 rpm-ல் டார்க் வழங்குகின்றது. இதில் 4 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

இரு பக்க டயர்களிலும் 130 மிமீ டிரம் பிரேக் வழங்கப்பட்டு கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்தை பெற்தாக, 80/100-18 M/C 47P டீயூப்லெஸ் டயர் இரு பக்கமும் கொண்டுள்ளது. டைமண்ட் வகை சேஸ் கொண்ட சிடி 110 ட்ரீம் டீலக்ஸ் பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பர் உள்ளது.

கருப்பு நிறத்துடன் சிவப்பு, கருப்பு உடன் நீலம், கருப்பு நிறத்துடன் பச்சை மற்றும் கருப்பு நிறத்துடன் சாம்பல் என நான்கு கவர்ச்சிகரமான வண்ணங்களில் கிடைக்கும். ரூ. 73,400 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) ஆரம்ப விலையில் கிடைக்கும். புதிய CD110 ட்ரீம் டீலக்ஸில் HMSI நிறுவனம் சிறப்பு 10 ஆண்டு உத்தரவாதத் தொகுப்பையும் (3 வருட நிலையான + 7 வருட விருப்ப நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம்) வழங்குகிறது.

Tags: Honda CD110 Dream
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version