Automobile Tamilan

புதிய நிறத்தில் சுசூகி ஆக்சஸ் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு வெளியானது

suzuki access 125

சுசூகி ஆக்சஸ் 125 ஸ்கூட்டரின் 50 லட்சம் விற்பனை இலக்கை கொண்டாடும் வகையில் சிறப்பு நிறத்தை வெளியிட்டுள்ளது. புதிய பேர்ல் ஷைனிங் பீஜ் என அழைக்கப்படுகின்ற நிறத்தில் சிவப்பு இருக்கையுடன் வெள்ளை மற்றும் பழுப்பு நிறத்தை கொண்டுள்ளது.

நிறத்தை தவிர மற்றபடி, தோற்றம் அமைப்பு, மெக்கானிக்கல் சார்ந்த வசதிகளில் எந்த மாற்றமும் இல்லாமல் வந்துள்ளது. இந்தியாவின் முதல் 125சிசி ஸ்கூட்டர் என்ற பெருமையை ஆக்சஸ் பெற்றுள்ளது.

2023 Suzuki Access 125

2023 சுசூகி ஆக்சஸ் 125 ஆனது OBD-2 மற்றும் E20 மேம்பாடு பெற்றதாக 6,750 rpm-ல் அதிகபட்சமாக 8.5 bhp பவர், 5,500 rpm-ல் 10 Nm டார்க் வழங்கும் 124cc, ஏர்-கூல்டு இன்ஜின் மூலம் தொடர்ந்து இயக்கப்படுகிறது.

சிறப்பு எடிசன் மற்றும் ரைட் கனெக்ட் எடிசன் என இருவிதமான வகைகளில் இந்த நிறத்தை சுசூகி வழங்குகின்றது. ரைட் கனெக்ட் என்பது ப்ளூடுத் இணைப்பின் வாயிலாக டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், இனகம்மிங் அழைப்பு, எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்அப் காட்சி, தவறிய அழைப்பு மற்றும் படிக்காத எஸ்எம்எஸ் எச்சரிக்கை, எச்சரிக்கையை மீறிய வேகம், ஃபோன் பேட்டரி நிலை ஆகியற்றை டிஜிட்டல் கிளஸ்ட்டரில் அறிந்து கொள்ளலாம்.

(எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு)

Exit mobile version