சுசூகி ஸ்கூட்டர்களின் ஆன்-ரோடு விலை பட்டியல் – ஏப்ரல் 2023

suzuki 125cc scooters on road price

சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம், இந்தியாவில் 125cc பிரிவில் விற்பனை செய்கின்ற சுசூகி ஸ்கூட்டர்களின் என்ஜின், அம்சங்கள், மைலேஜ் மற்றும் ஆன்-ரோடு விலை என அனைத்தும் அறிந்து கொள்ளலாம்.

இந்நிறுவனம் பர்க்மேன் ஸ்டீரிட், பர்க்மேன் ஸ்டீரீட் EX, அவெனிஸ் 125, மற்றும் அக்செஸ் 125 என நான்கு மாடல்களை விற்பனை செய்து வருகின்றது. முன்பாக யமஹா ஸ்கூட்டர்கள், ஹோண்டா ஸ்கூட்டர்களின் ஆன்-ரோடு விலை பட்டியலை வெளியிட்டிருந்தோம்.

Suzuki-access-125

2023 Suzuki Access 125

பிரசத்தி பெற்ற சுசூகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டர் 125cc பிரிவில் விற்பனை ஆகின்ற மாடல்களில் முதன்மையான ஒன்றாகும். இந்த ஸ்கூட்டரில் ஸ்டாண்டர்டு, ஸ்பெஷல் எடிசன் மற்றும் கனெக்ட்டிவிட்டி வசதிகளை வழங்கும் ரைட் கனெக்ட் என மூன்று விதமாகவும், டிரம், டிஸ்க் பிரேக் என இரு ஆப்ஷன்களிலும் மொத்தமாக 6 விதமான வேரியண்டுகள் கிடைக்கின்றன.

2023 Suzuki Access 125
என்ஜின் (CC)124 cc
குதிரைத்திறன் (bhp@rpm)8.7 bhp @ 6750 rpm
டார்க் (Nm@rpm)10 Nm @ 5000 rpm
கியர்பாக்ஸ்CVT
மைலேஜ்48 Kmpl

சுசூகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டரின் போட்டியாளர்கள் டிவிஎஸ் ஜூபிடர் 125, ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125, ஃபேசினோ 125 மற்றும் ஹோண்டா ஆக்டிவா 125 ஆகும்.

2023 சுசூகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை ₹ 97,959 முதல் ₹ 1,10,056 வரை ஆகும்.

suzuki avenis price

2023 Suzuki Avenis 125

மிக ஸ்டைலிஷான தோற்ற அமைப்பினை பெற்றுள்ள 2023 சுசூகி அவெனிஸ் ஸ்கூட்டரில் 125cc என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் முன்புறத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் மட்டும் கொடுக்கப்பட்டு ஸ்டாண்டர்டு மற்றும் ரேஸ் எடிசன் என இரண்டு மாடல்கள கிடைக்கின்றது.

2023 Suzuki Avenis 125
என்ஜின் (CC)124 cc
குதிரைத்திறன் (bhp@rpm)8.7 bhp @ 6750 rpm
டார்க் (Nm@rpm)10 Nm @ 5000 rpm
கியர்பாக்ஸ்CVT
மைலேஜ்48 Kmpl

சுசூகி அவெனிஸ் 125 ஸ்கூட்டரின் போட்டியாளர்கள்  ஸ்கூட்டரின் போட்டியாளராக டிவிஎஸ் என்டார்க் 125, ரே ZR 125, சுசூகி பர்க்மேன் ஸ்டீரிட், ஹோண்டா கிரேஸியா மற்றும் டெஸ்ட்டினி 125 போன்றவை உள்ளது.

2023 சுசூகி அவெனிஸ் 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை ₹ 1,05,959 முதல் ₹ 1,08,656 வரை ஆகும்.

Burgman street

2023 Suzuki Burgman Street 125

சுசூகி நிறுவனத்தின் மேக்ஸி ஸ்டைல் பெற்ற மாடலாக விளங்கும் பர்க்மேன் ஸ்டீரிட் ஸ்கூட்டரில் 125cc என்ஜின் கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டரிலும் ப்ளூடுத் கனெக்ட்டிவிட்டி அம்சங்களை பெற்றுள்ளது.

2023 Suzuki Burgman street 125
என்ஜின் (CC)124 cc
குதிரைத்திறன் (bhp@rpm)8.7 bhp @ 6750 rpm
டார்க் (Nm@rpm)10 Nm @ 5000 rpm
கியர்பாக்ஸ்CVT
மைலேஜ்48 Kmpl

சுசூகி பர்க்மேன் ஸ்டீரிட் மாடலுக்கு போட்டியாக டிவிஎஸ் என்டார்க் 125, ரே ZR 125, ஹோண்டா கிரேஸியா மற்றும் டெஸ்ட்டினி 125 போன்றவை உள்ளது.

2023 சுசூகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை ₹ 1,13,959 முதல் ₹ 1,18,056 வரை ஆகும்.

2023 Suzuki Burgman Street EX

சுசூகி பர்க்மேன் ஸ்டீரிட் EX ஸ்கூட்டரில் 125cc என்ஜின் கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டரிலும் ப்ளூடுத் கனெக்ட்டிவிட்டி அம்சங்களை ஆனால் இந்த மாடலின் மிக முக்கியமான வித்தியாசம் இரு  பக்க டயர்களும் 12 அங்குல வீல் கொண்டுள்ளது.

2023 Suzuki Burgman street EX
என்ஜின் (CC)124 cc
குதிரைத்திறன் (bhp@rpm)8.7 bhp @ 6750 rpm
டார்க் (Nm@rpm)10 Nm @ 5000 rpm
கியர்பாக்ஸ்CVT
மைலேஜ்48 Kmpl

2023 சுசூகி பர்க்மேன் ஸ்டீரிட் EX ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை ₹ 1,35,156 வரை ஆகும். இந்த மாடல் குறிப்பிட்ட சில டீலர்களிடம் மட்டுமே கிடைக்கும்.

(கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விலை தமிழ்நாட்டிற்கு பொருந்தும்)

07a4a suzuki burgman street

அனைத்து ஆன்-ரோடு விலை பட்டியலும் தமிழ்நாட்டின் தோராயமானதாகும்.. எனவே விலை விபரம் டீலர்களுக்கு டீலர் மாறுபடும்.. துல்லியமான விலையை அறிய டீலரை அனுகுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *