125cc சந்தையில் உள்ள டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ரைடர் 125 பைக்கில் ஒற்றை இருக்கை பெற்ற வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்பாக விற்பனையில் இருந்த டிரம் பிரேக் பெற்ற வேரியண்ட் நீக்கப்பட்டுள்ளது.
குறைந்த விலையில் கிடைத்து வந்த டிரம் பிரேக் நீக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிங்கிள் இருக்கை பெற்ற மாடலிலும் 240mm டிஸ்க் பிரேக் ஆனது முன்புறத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. பின்புற டயரில் பொதுவாக 130mm டிரம் பிரேக் உள்ளது.
தோற்ற அமைப்பு டிசைன், பாடி கிராபிக்ஸ் உள்ளிட்ட அம்சங்களில் எந்த மாற்றங்களும் இல்லை. ரைடர் பைக்கில் 124.8cc சிங்கிள்-சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக பவர்11.38PS மற்றும் டார்க் 11.2Nm வெளிப்படுத்தும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. பைக்கின் செயல்திறன் 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 5.9 விநாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்ளும்.
ஒற்றை இருக்கை வேரியண்டிலும் எல்இடி ஹெட்லேம்ப் & டெயில் லைட், பெற்று ஸ்பீடோமீட்டர், டேக்கோமீட்டர், ட்ரிப் மீட்டர், கியர் பொசிஷன் இண்டிகேட்டர், கடிகாரம், ஃப்யூவல் அளவு மற்றும் ரைடு மோடு ஆகியவற்றை வழங்கும் நெகடிவ் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் பெற்றுள்ளது.
ஸ்பிளிட் சிட் பெற்ற வேரியண்ட் விலை கூடுதலாகவும், கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை வழங்குகின்ற ஸ்மார்ட் எக்ஸ்கனெக்ட் விலை ₹ 1,06,757 ஆகும். ஒற்றை இருக்கை பெற்ற புதிய வேரியண்ட் சிவப்பு நிறத்தில் மட்டும் கிடைக்கும்.
TVS Raider Variants | Ex-Showroom Price |
Single Seat (NEW) | Rs 97,657 |
Split Seat | Rs 98,657 |
SX (SmartXonnect) | Rs 1,06,757 |