Automobile Tamilan

டிசம்பர் 8 ஆம் தேதி ஏப்ரிலியா RS 457 விற்பனைக்கு அறிமுகமாகிறது

aprilia rs 457

ஏப்ரிலியா நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்த RS 457 ஸ்போர்ட்டிவ் பைக் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு ரூ.4 லட்சத்துக்குள் அறிமுகம் செய்யப்படலாம். டிசம்பர் 8 மற்றும் 9 ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியன் பைக் வாரத்தில் வெளியிடப்படலாம்.

10வது இந்தியன் பைக் வீக் மூலம் ஹீரோ, ஹார்லி-டேவிட்சன், சுசூகி, டிரையம்ப், கவாஸாகி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

Aprilia RS 457

சர்வதேச அளவில் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஆர்எஸ் 457 பைக் மாடல் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இந்திய சந்தையில் விற்பனை செய்வதற்கான டீசரை உறுதிப்படுத்தியுள்ளது.

ஏப்ரிலியா RS457 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 457cc லிக்யூடு கூல்டு பேரலல் ட்வீன் சிலிண்டர் என்ஜின், இரட்டை கேம்ஷாஃப்ட் டைமிங் கொண்டு ஒவ்வொரு சிலிண்டருக்கு நான்கு வால்வுகளை பெற்று அதிகபட்சமாக 47 hp பவர் வெளிப்படுத்துகின்றது.

சஸ்பென்ஷன் அமைப்பில் முன்பக்கத்தில் 41mm யூஎஸ்டி ஃபோர்க் 120mm பயணிக்கும் வசதியுடன்,  ப்ரீலோட் அட்ஜெஸ்ட்டிபிட்டி கொண்ட 130mm பயணத்திற்கான ஸ்டீல் ஸ்விங்கார்மில் மோனோஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டுள்ளது.

பிரேக்கிங் சிஸ்டத்தில் பைபிரே ரேடியல் மவுண்ட் 4 பிஸ்டன் காலிபர் உடன் 320mm டிஸ்க் பெற்று மற்றும் 220mm டிஸ்க் பிரேக் உள்ளது. டூயல் சேனல் ஏபிஎஸ் அமைப்பு கொண்டுள்ளது.

இந்திய சந்தையில் ஏப்ரிலியா RS 457 பைக் விலை ரூ.3.30 லட்சம் முதல் ரூ.4 லட்சம் விலைக்குகள் துவங்கலாம்.

Exit mobile version