இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற ஏப்ரிலியா RS457 பைக்கினை அமெரிக்கா சந்தையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ள நிலையில், இந்தியாவில் ஆர்எஸ்457 அடுத்த ஆண்டின் துவக்க மாதங்களில் விற்பனைக்கு வெளியாகலாம்.
கேடிஎம் ஆர்சி 390, கவாஸாகி நிஞ்ஜா 500 உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ளுகின்ற ஆர்எஸ் 457 பைக்கின் அமெரிக்க விலை $6799 (ரூ. 5.66 லட்சம்) முதல் துவங்கி ரேசிங் ஸ்டிரைப் பெற்ற $6899 (ரூ. 5.75 லட்சம்) வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Aprilia RS 457
பியாஜியோ குழுமத்தின் கீழ் செயல்படுகின்ற பாராமதி நகரில் உள்ள ஆலையில் தயாரிக்கப்படுகின்ற ஏப்ரிலியா RS457 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 457cc லிக்யூடு கூல்டு பேரலல் ட்வீன் சிலிண்டர் என்ஜின், இரட்டை கேம்ஷாஃப்ட் டைமிங் கொண்டு ஒவ்வொரு சிலிண்டருக்கு நான்கு வால்வுகளை பெற்று அதிகபட்சமாக 47 hp பவர் வெளிப்படுத்துகின்றது.
சஸ்பென்ஷன் அமைப்பில் முன்பக்கத்தில் 41mm யூஎஸ்டி ஃபோர்க் 120mm பயணிக்கும் வசதியுடன், ப்ரீலோட் அட்ஜெஸ்ட்டிபிட்டி கொண்ட 130mm பயணத்திற்கான ஸ்டீல் ஸ்விங்கார்மில் மோனோஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டுள்ளது.
பிரேக்கிங் சிஸ்டத்தில் பைபிரே ரேடியல் மவுண்ட் 4 பிஸ்டன் காலிபர் உடன் 320mm டிஸ்க் பெற்று மற்றும் 220mm டிஸ்க் பிரேக் உள்ளது. டூயல் சேனல் ஏபிஎஸ் அமைப்பு கொண்டுள்ளது.
175 கிலோ எடை கொண்டுள்ள ஏப்ரிலியா ஆர்எஸ் 457 பைக்கில் முழுமையான எல்இடி ஹெட்லைட், 5-இன்ச் TFT வண்ண கிளஸ்டரை கொண்டுள்ளது. 17 அங்குல அலாய் வீல் பெற்று பல்வேறு ஸ்டைலிங் அம்சங்களை ஏப்ரிலியா 660 பைக்கில் இருந்து பெற்றுள்ளது.
இந்திய சந்தைக்கு விற்பனைக்கு வரும் பொழுது ஏப்ரிலியா RS457 பைக்கின் விலை ரூ.3.50 லட்சத்துக்குள் துவங்கி ரூ.4.00 லட்சத்துக்குள் நிறைவடையலாம்.