பியாஜியோ நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஏப்ரிலியா நிறுவனம், மிக சிறப்பான ஏரோடைனமிக்ஸ் ஸ்டைலிங் பெற்ற RS 457 பைக்கினை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற இந்த மாடல் விற்பனைக்கு விரைவில் வெளியாக உள்ளது.
ஏப்ரிலியா RS வரிசையில் கிடைக்கின்ற RS 660 பைக்கின் தோற்ற உந்துதலை தழுவியதாக வடிவமைக்கப்பட்டுள்ள மாடல் மிகவும் சக்திவாய்ந்த 457சிசி லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
Aprilia RS 457
புதிதாக வந்துள்ள ஏப்ரிலியா ஆர்எஸ் 457 பைக்கில் 457cc லிக்யூடு கூல்டு பேரலல் ட்வீன் சிலிண்டர் என்ஜின், இரட்டை கேம்ஷாஃப்ட் டைமிங் கொண்டு ஒவ்வொரு சிலிண்டருக்கு நான்கு வால்வுகளை பெற்று அதிகபட்சமாக 47 hp பவர் வெளிப்படுத்துகின்றது.
41 மிமீ முன்புற யூஎஸ்டி ஃபோர்க் 120 மிமீ பயணக்கும் வசதியுடன், ப்ரீலோட் அட்ஜெஸ்ட்டிபிட்டி கொண்ட 130 மிமீ பயணத்திற்காக, ஸ்டீல் ஸ்விங்கார்மில் மோனோஷாக் கொடுக்கப்பட்டுள்ளது. பிரேக்கிங் சிஸ்டத்தில் பைபிரே ரேடியல் மவுண்ட் 4 பிஸ்டன் காலிபர் உடன் 320mm டிஸ்க் பெற்று மற்றும் 220mm டிஸ்க் பிரேக் உள்ளது. டூயல் சேனல் ஏபிஎஸ் அமைப்பு கொண்டுள்ளது.
17-இன்ச் வீல் பெற்று முன்பக்கத்தில் 110/70 டயர்களும், பின்புறத்தில் 150/60 டயர்களும் பொருத்தப்பட்டுள்ளன, புதிய அப்ரிலியாவின் பல்வேறு அம்சங்கள் முந்தைய ஆர்எஸ் 660 பைக்கில் இருந்த பெறப்பட்டுள்ளது.
175 கிலோ எடை கொண்டுள்ள ஏப்ரிலியா ஆர்எஸ் 457 பைக்கில் முழுமையான எல்இடி ஹெட்லைட், 5-இன்ச் TFT வண்ண கிளஸ்டரைப் பயன்படுத்துகிறது, அதே நேரத்தில் ஹேண்டில்பார் கட்டுப்பாடுகளில் பேக்லைட் உள்ளது.
விரைவில், இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள ஏப்ரிலியா RS 457 மாடல் மிக சவாலான விலையில் அமையக்கூடும்.