Automobile Tamilan

161கிமீ ரேஞ்சுடன் ரூ.1.47 லட்சத்தில் ஏதெர் 450S விற்பனைக்கு வெளியானது

2025 ather 450s white new

ஏதெர் எனர்ஜியின் பிரசத்தி பெற்ற 450 வரிசையில் கூடுதலாக வெளியிடப்பட்டுள்ள 450S வேரியண்டில் 3.7Kwh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு  161 கிமீ ரேஞ்ச் வழங்குவதுடன் மற்றபடி வழக்கமான நுட்பவிபரங்களை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

ஏதெரின் 450 வரிசையில் ஏற்கனவே 450எஸ் 2.9Kwh கிடைக்கின்ற நிலையில் 450எக்ஸ் வேரியண்டில் மட்டும் 3.7Kwh பேட்டரி பேக் கிடைத்து வந்தது.

அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கிமீ ஆக பெற்று  3.7Kwh பேட்டரி பேக்குடன் 161 கிமீ ரேஞ்ச் பெற்றிருந்தாலும் கூடுதலாக, ஸ்மார்ட்ஈக்கோ, ஈக்கோ,  ரைட், ஸ்போர்ட் என 4 விதமான ரைடிங் மோடுகள் பெற்று உண்மையான நிகழ்நேரத்தில் 130 கிமீ பயணிக்கலாம்.

டீப்வியூ டிஸ்பிளே பெற்றதாக அமைந்துள்ள இந்த மின்சார ஸ்கூட்டரில் ஏதெர்ஸ்டேக் புரோ  மேம்பாடு மூலம் ரைடிங் மோடுகள், மேம்ப் வசதிகள் , மற்றும் நீட்டிக்கப்பட்ட வாரண்டி வழங்கப்படுகின்றது.

3.7 kWh பேட்டரி பேக் கொண்ட 450S மாடலுக்கான முன்பதிவு தற்போது இந்தியா முழுவதும் உள்ள டீலர்கள் மற்றும் ஆன்லைன் மூலம் தொடங்கப்பட்டுள்ளன. இதன் விநியோகம் ஆகஸ்ட் 2025 முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் INR 147,312 (எக்ஸ்-ஷோரூம்) 3.7 kWh பேட்டரி பேக் 450S மாடலின் விலை அமைந்துள்ளது. மற்றபடி, டெல்லியில் INR 148,047 (எக்ஸ்-ஷோரூம்), மும்பையில் INR 148,258 (எக்ஸ்-ஷோரூம்), பெங்களூருவில் INR 145,999 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.

Exit mobile version