Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2025 ஏதெர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

by MR.Durai
5 January 2025, 4:14 pm
in Ather energy
0
ShareTweetSend

2025 ஏதெர் 450 இ ஸ்கூட்டர்

ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் பெர்ஃபாமென்ஸ் ரக 450 வரிசை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் 450S, 450X, 450 Apex என மூன்று வேரியண்டுகளின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச், நுட்ப விபரங்கள், நிறங்கள் மற்றும் முக்கிய சிறப்பு அம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

Ather 450

ஏதெரின் 450 வரிசையில் இடம்பெற்றுள்ள 2.9Kwh மற்றும் 3.7Kwh என இரண்டு பேட்டரி ஆப்ஷனை பெற்று 450S, 450X, 450X 3.7Kwh, மற்றும் 450 Apex ஆகியவற்றின் அடிப்படையான மெக்கானிக்கல் சார்ந்த பிரேக், டயர், உள்ளிட்டவை ஒரே மாதிரியாக அமைந்துள்ளது.

22 லிட்டர் ஸ்டோரேஜ் பெற்று முன்புறத்தில் 200மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 190 மிமீ டிஸ்க் பெற்று கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் பெற்று 170மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்று 1296 மிமீ வீல்பேஸ் பெற்று 90/90-12 மற்றும் பின்புறத்தில் 100/80-12 டயருடன் எல்இடி விளக்குகள் வழங்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் உடன் பின்புறத்தில் மோனோஷாக் கொண்டுள்ளது.

ஏதெர் 450S வேரியண்டில் 2.9Kwh பேட்டரி பொருத்தப்பட்டு முழுமையான சார்ஜில் 122 கிமீ பயணிக்கும் என சான்றிதழ் வழங்கப்பட்டு மணிக்கு அதிகபட்ச வேகம் 90 கிமீ கொண்டுள்ளது. ஸ்மார்ட்ஈக்கோ, ஈக்கோ,  ரைட் மற்றும் ஸ்போர்ட் என 4 விதமான ரைடிங் மோடுகளை பெற்று உண்மையான நிகழ்நேரத்தில் 105 கிமீ பயணிக்கலாம். 700W  சார்ஜரின் மூலம் 0-80 % சார்ஜ் ஏற 5.30 மணி நேரம் போதுமானதாகும். கூடுதலாக விரைவு சார்ஜர் வசதியும் உள்ள நிலையில் 7 அங்குல  கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு மற்றும் கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் புரோ ஆப்ஷனலாக உள்ளது.

ஏதெர் 450X மாடலின் 2.9Kwh பேட்டரி பேக்குடன் 450எஸ் போல 126 கிமீ ரேஞ்ச் பெற்றிருந்தாலும் கூடுதலாக, ஸ்மார்ட்ஈக்கோ, ஈக்கோ,  ரைட், ஸ்போர்ட் மற்றும் ரேப் என 5 விதமான ரைடிங் மோடுகள் மற்றும் 7 அங்குல டிஎஃப்டி டச்ஸ்க்ரீன் உடன் கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் புரோ ஆப்ஷனலாக உள்ளது. சார்ஜரின் மூலம் 0-80 % சார்ஜ் ஏற 3 மணி நேரம் போதுமானதாகும். கூடுதலாக விரைவு சார்ஜர் வசதியும் உள்ளது.

450X மாடலின் 3.7Kwh பேட்டரி பேக்குடன் 161 கிமீ ரேஞ்ச் பெற்றிருந்தாலும் கூடுதலாக, ஸ்மார்ட்ஈக்கோ, ஈக்கோ,  ரைட், ஸ்போர்ட் மற்றும் ரேப் என 5 விதமான ரைடிங் மோடுகள் பெற்று உண்மையான நிகழ்நேரத்தில் 130 கிமீ பயணிக்கலாம்.

பிரத்தியேகமான சிறப்பு அபெக்ஸ் 450 மாடலில் உள்ளிருக்கும் பாகங்கள் வெளியே தெரியும் வகையில் மிக ஸ்டலிஷான மேம்பாடுகளுடன் மற்ற இரண்டை விட மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தும் வகையில் சிங்கிள் சார்ஜில் 120 கிமீ ரேஞ்ச் கிடைக்கும்.

Model 450S 450X 2.9kWh 450X 3.7kWh Apex
பவர் 5.4kW 6.4kW 6.4kW 7kW
டார்க் 22Nm 26Nm 26Nm 26Nm
ரேஞ்ச் 122km 126km 161km 157km
0-40km/h 3.9sec 3.3sec 3.3sec 2.9sec
டாப் ஸ்பீடு 90km/h 90km/h 90km/h 100km/h
சார்ஜிங் (0-100%) 7h 45min 4h 30min 5h 45min 5h 45min
Ride Modes Smart Eco, Eco, Ride, Sport Smart Eco, Eco, Ride, Sport, Warp Smart Eco, Eco, Ride, Sport, Warp Smart Eco, Eco, Ride, Sport, Warp+
Magic Twist No On/Off Low, High, Off Low, High, Off
Traction Control No Off, Rain, Road, Rally Off, Rain, Road, Rally Off, Rain, Road, Rally
கிளஸ்ட்டர் 7” LCD 7” TFT Touchscreen 7” TFT Touchscreen 7” TFT Touchscreen

கூடுதலாக வழங்கப்பட்டுள்ள புரோ பேக் மூலம் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகள் ஏதெர்ஸ்டேக் 6 மேம்பாடு, ரைடிங் மோடுகள், மேம்ப் வசதிகள் , மற்றும் நீட்டிக்கப்பட்ட வாரண்டி வழங்கப்படுகின்றது.

  • Ather 450S 2.9Kwh – ₹ 1,31,312
  • Ather 450S 2.9Kwh + Pro – ₹ 1,45,313
  • Ather 450X 2.9Kwh – ₹ 1,48,312
  • Ather 450X 2.9Kwh + pro – ₹ 1,65,312
  • Ather 450X 3.7Kwh – ₹ 1,58,312
  • Ather 450X 3.7Kwh + pro – ₹ 1,78,312
  • Ather 450 Apex 3.7Kwh – ₹ 2,01,311

(Ex-showroom)

2025 ather 450x traction mode

2025 Ather 450 electric Scooter on-Road Price in Tamil Nadu

2025 ஏதெர் 450s, 450x, 450X 3.7Kwh, 450 apex என நான்கு ஸ்கூட்டர்களின் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர், புதுச்சேரி மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

  • Ather 450S 2.9Kwh – ₹ 1,38,938
  • Ather 450S 2.9Kwh + Pro – ₹ 1,52,937
  • Ather 450X 2.9Kwh – ₹ 1,56,175
  • Ather 450X 2.9Kwh + pro – ₹ 1,73,175
  • Ather 450X 3.7Kwh – ₹ 1,66,373
  • Ather 450X 3.7Kwh + pro – ₹ 1,86,373
  • Ather 450 Apex 3.7Kwh – ₹ 2,10,311

(All Price on-road Tamil Nadu)

  • Ather 450S 2.9Kwh – ₹ 1,39,124
  • Ather 450S 2.9Kwh + Pro – ₹ 1,53,126
  • Ather 450X 2.9Kwh – ₹ 1,56,356
  • Ather 450X 2.9Kwh + pro – ₹ 1,73,356
  • Ather 450X 3.7Kwh – ₹ 1,66,551
  • Ather 450X 3.7Kwh + pro – ₹ 1,86,551
  • Ather 450 Apex 3.7Kwh – ₹ 2,10,335

(All Price on-road Pondicherry)

2025 ஏதெர் 450 எலெக்ட்ரிக்

2025 ஏதெர் 450 நுட்பவிபரங்கள்

Ather 450 Specs 450s/450x/ Apex 450
மோட்டார்
வகை எலெக்ட்ரிக்
மோட்டார் வகை PMSM மோட்டார்
பேட்டரி 2.9Kwh/3.7 Kwh Lithium ion
அதிகபட்ச வேகம் 90 Km/h (100km/h Apex)
அதிகபட்ச பவர் 5.4kw/6.4kw/7kw
அதிகபட்ச டார்க் 22 Nm/26Nm
அதிகபட்ச ரேஞ்சு 122/126/161/157 km per charge (IDC Claimed)
சார்ஜிங் நேரம் 5.45 மணி நேரம் (0-80%)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் டியூப்லெர்
டிரான்ஸ்மிஷன் ஆட்டோமேட்டிக்
ரைடிங் மோட் Smart Eco, Eco, Ride, Sport, Warp+
சஸ்பென்ஷன்
முன்பக்கம் டெலிஸ்கோபிக்
பின்பக்கம் மோனோஷாக்
பிரேக்
முன்புறம் டிஸ்க் 200மிமீ
பின்புறம் டிஸ்க் 190 மிமீ (with CBS)
வீல் & டயர்
சக்கர வகை அலாய்
முன்புற டயர்  90/90-12  ட்யூப்லெஸ்
பின்புற டயர்  100/80-12 ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
ஹெட்லைட் எல்இடி
சார்ஜர் வகை Portable 700W
கிளஸ்ட்டர் 7 Inch TFT டிஜிட்டல் கிளஸ்ட்டர்
பரிமாணங்கள்
நீளம் –
அகலம் –
உயரம் –
வீல்பேஸ் 1296 mm
இருக்கை உயரம் –
கிரவுண்ட் கிளியரண்ஸ் 170 mm
பூட் கொள்ளளவு 22 Litre
எடை (Kerb) 108kg/111.6 kg

ஏதெர் 450 ஸ்கூட்டரின் நிறங்கள்

450 எக்ஸ், 450 எஸ் மற்றும் 450 அபெக்ஸ் ஸ்கூட்டரில் இன்டீயம் ப்ளூ நிறத்துடன் மற்ற இரண்டிலும் ஸ்டெல்த் ப்ளூ, பிளாக், கிரே நிறங்கள் பொதுவாகவும், 450எக்ஸ் மாடலில் கூடுதலாக ஹைப்பர் சேன்ட், ரெட், மற்றும் லூனார் கிரே உள்ள நிலையில் குறைந்த விலை 450எஸ் மாடலில் வெள்ளை என ஒட்டுமொத்தமாக 8 நிறங்கள் உள்ளன.

ather 450 apex
2025 ather 450s white new
2025 ather 450
2025 ather 450 hypersand
2025 ather 450x lunar grey
2025 ather 450x red
2025 ather 450x black
2025 ather 450x space grey

2025 Ather 450 Rivals

டிவிஎஸ் ஐக்யூப், ஹீரோ விடா வி2 , ஓலா எஸ்1, சேத்தக், ஏதெர் ரிஸ்டா, ஆக்டிவா e, ஆகியவற்றுடன் மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை எதிர்கொள்ளுகின்றது.

Faq ஏதெர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஏதெர் 450 எலெக்ட்ரிக் மைலேஜ் எவ்வளவு ?

ஏதெர் 450s மாடல் 105 கிமீ
ஏதெர் 450X மற்றும் Apex மாடல் 130 கிமீ வரை ஸ்மார்ட்ஈகோ மோடில் வெளிப்படுத்தும்.

ஏதெர் 450 அபெக்ஸ் ஸ்கூட்டரின் பவர் மற்றும் டார்க் விபரம் ?

PMSM மோட்டார் பொருத்தப்பட்டு பவர் 7Kw வழங்குகின்றது. டார்க் 26 Nm வழங்குகின்றது.

ஏதெர் 450 ஆன்-ரோடு விலை எவ்வளவு ?

ஏதெர் 450 சீரிஸ் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை ரூ.1.39 லட்சம் முதல் ரூ.2.11 லட்சம் வரை அமைந்தள்ளது.

Related Motor News

புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஆகஸ்ட் 2025ல் வெளியிடும் ஏதெர் எனர்ஜி

இந்தியாவின் டாப் 5 எலக்ட்ரிக் டூ வீலர் தயாரிப்பாளர்கள் – மே 2025

2025 ஏதெர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள்

2025 ஏதெர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியாகின்றது..!

ஏதெர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.6,000 வரை உயருகின்றது..!

8 வருடம் அல்லது 80,000 கிமீ வரை வாரண்டியை அறிவித்த ஏதெர் எனர்ஜி

ஏதெரின் 450 மாடலை சார்ஜ் செய்ய எவ்வளவு நேரம்?

ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷனுடன் வேரியண்ட் வாரியாக சார்ஜிங் நேரம் 3 மணி நேரம் முதல் 7.45 மணிநேரம் வரை எடுத்துக் கொள்ளுகின்றது.

ஏதெர் 450 சீரிஸ் போட்டியாளர்கள் யார் ?

டிவிஎஸ் ஐக்யூப், ஓலா எஸ்1, ஏதெர் ரிஸ்டா, சேத்தக், ஆக்டிவா e, விடா வி2 ஆகியவற்றுடன் மற்ற மின்சார பேட்டரி ஸ்கூட்டர்களை எதிர்கொள்ளும்.

Ather 450 e scooter Image Gallery

2025 ஏதெர் 450 இ ஸ்கூட்டர்
2025 ather 450 hypersand
2025 ather 450
2025 ஏதெர் 450 எலெக்ட்ரிக்
ather 450 apex
ather 450 apex
ஏதெர் 450 அபெக்ஸ்
ather 450 apex first review
ather 450 apex cluster
ather 450 apex rear
ather 450 apex panel
ather 450 apex wheel
ather 450 apex headlight
2025 ather 450x traction mode
Tags: Ather 450 ApexAther 450SAther 450X
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ஏதெர் ரிஸ்டா இ ஸ்கூட்டர்

ஏதெர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

அடுத்த செய்திகள்

Renault Boreal suv in tamil

7 இருக்கை ரெனால்ட் போரியல் எஸ்யூவி இந்திய அறிமுகம் எப்பொழுது.!

global spec ktm 390 enduro r

ரூ.3.54 லட்சத்தில் சர்வதேச கேடிஎம் 390 Enduro R விற்பனைக்கு வந்தது

டெஸ்லா

ஜூலை 15., இந்தியாவில் டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் அறிமுகம்.!

கேரன்ஸ் கிளாவிஸ்.இவி., K-Charge பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்த கியா இந்தியா

கேரன்ஸ் கிளாவிஸ்.இவி., K-Charge பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்த கியா இந்தியா

new BMW 2 Series Gran Coupe

புதிய BMW 2 சீரிஸ் கிரான் கூபே காருக்கான முன்பதிவு துவங்கியது

KTM 390 அட்வென்ச்சர் X

புதிய வசதிகளுடன் கேடிஎம் 390 அட்வென்ச்சர் X+ விற்பனைக்கு வந்தது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan