ஏதெர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ஏதெர் ரிஸ்டா இ ஸ்கூட்டர்

ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் குடும்பத்திற்கான ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.9Kwh S, 2.9Kwh Z, 3.7Kwh S மற்றும் 3.7 Kwh Z என நான்கு வேரியண்டுகளின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச், நுட்ப விபரங்கள், நிறங்கள் மற்றும் முக்கிய சிறப்பு அம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

Ather Rizta

ஸ்போர்ட்டிவ் ஏதெர் 450 வரிசையில் இடம்பெற்றுள்ள 2.9Kwh மற்றும் 3.7Kwh என இரண்டு பேட்டரி ஆப்ஷன், மோட்டார் உள்ளிட்ட அடிப்படையான சில பாகங்களை பகிர்ந்து கொண்டாலும் குடும்பத்திற்கு ஏற்ற வகையில் அதிக இடவசதி, மிக நீளமான மற்றும் அகலமான இருக்கை வழங்கப்பட்டுள்ளது.

34 லிட்டர் ஸ்டோரேஜ் பெற்று மூன்று வேரியண்டிலும் பொதுவாக PMSM மோட்டாருடன் 2 விதமான மாறுபட்ட பேட்டரி பெற்றாலும் 4.3KW பவர், 22Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கிமீ மற்றும் 0-40 கிமீ வேகத்தை வெறும் 4.7 வினாடிகளில் எட்டுகின்றது.

மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் முன்புறத்தில் 200மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் பெற்று கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் பெற்று 165மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்று 1285 மிமீ வீல்பேஸ் பெற்று 90/90-12 மற்றும் பின்புறத்தில் 100/80-12 டயருடன் சஸ்பென்ஷன் அமைப்பில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் உடன் பின்புறத்தில் மோனோஷாக் கொண்டுள்ளது.

ஏதெர் Rizta S 2.9Kwh வேரியண்டில் 2.9Kwh பேட்டரி பொருத்தப்பட்டு முழுமையான சார்ஜில் 123 கிமீ பயணிக்கும் என சான்றிதழ் வழங்கப்பட்டு மணிக்கு அதிகபட்ச வேகம் 80 கிமீ கொண்டு ஜிப், ஸ்மார்ட்ஈக்கோ என 2 விதமான ரைடிங் மோடுகளை பெற்று உண்மையான நிகழ்நேரத்தில் 95-100 கிமீ பயணிக்கலாம். 0-80 % சார்ஜ் ஏற 6.30 மணி நேரம் போதுமானதாகும். கூடுதலாக விரைவு சார்ஜர் வசதியும் உள்ள நிலையில் 7 அங்குல தொடுதிரை அல்லாத  டீப்வியூ கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு மற்றும் கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் புரோ ஆப்ஷனலாக உள்ளது.

Rizta S 3.7Kwh பேட்டரி பேக்குடன் முழுமையான சார்ஜில் 159 கிமீ பயணிக்கும் என சான்றிதழ் வழங்கப்பட்டு மணிக்கு அதிகபட்ச வேகம் 80 கிமீ கொண்டு ஜிப், ஸ்மார்ட்ஈக்கோ என 2 விதமான ரைடிங் மோடுகளை பெற்று உண்மையான நிகழ்நேரத்தில் 120 கிமீ பயணிக்கலாம்.

ஏதெர் Rizta Z 2.9Kwh பேட்டரி ரிஸ்டா S போல ரேஞ்ச் மற்றும் பேட்டரி பெற்றாலும் 7 அங்குல டிஎஃப்டி டச்ஸ்க்ரீன் உடன் கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் புரோ ஆப்ஷனலாக பெற்று கூகுள் மேப், மேஜிக் ட்விஸ்ட் , டிராக்ஷன் கண்ட்ரோல் ஆகியவற்றுடன் பல்வேறு வசதிகள் உள்ளது.

Rizta Z 3.7Kwh பேட்டரி பேக்குடன் முழுமையான சார்ஜில் 159 கிமீ பயணிக்கும் என சான்றிதழ் வழங்கப்பட்டு மணிக்கு அதிகபட்ச வேகம் 80 கிமீ கொண்டு ஜிப், ஸ்மார்ட்ஈக்கோ என 2 விதமான ரைடிங் மோடுகளை பெற்று உண்மையான நிகழ்நேரத்தில் 120 கிமீ பயணிக்கலாம். 7 அங்குல டிஎஃப்டி டச்ஸ்க்ரீன் உடன் கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் புரோ ஆப்ஷனலாக பெற்று கூகுள் மேப், மேஜிக் ட்விஸ்ட் , டிராக்ஷன் கண்ட்ரோல் ஆகியவற்றுடன் பல்வேறு வசதிகள் உள்ளது.

Ather RiztaRizta SRizta ZRizta Z 
மோட்டார் வகைPMSMPMSMPMSM
பேட்டரி2.9Kwh2.9kwh3.7kwh
பவர்4.3kW4.3kW4.3kw
டார்க்22 NM22 NM22 NM
ரேஞ்சு (IDC)123 Km123 Km159Km
ரைடிங் ரேஞ்சு100 Km100 Km120km
அதிகபட்ச வேகம்80 Kmph80 Kmph80 Kmph
சார்ஜிங் நேரம் (0-80%)6 hrs 30 Mins6 hrs 30 mins4 hrs 30 mins
ரைடிங் மோடுZip & SmartEcoZip & SmartEcoZip & SmartEco

கூடுதலாக வழங்கப்பட்டுள்ள புரோ பேக் மூலம் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகள் ஏதெர்ஸ்டேக் 6 மேம்பாடு, ரைடிங் மோடுகள், மேம்ப் வசதிகள் , மற்றும் நீட்டிக்கப்பட்ட வாரண்டி வழங்கப்படுகின்றது. மூன்று வருடம் அல்லது 30,000 கிமீ வாரண்டி வழங்கப்படும் நிலையில் கூடுலாக நீட்டிக்கப்பட்ட வாரண்டி வழங்கப்படுகின்றது.

  • Ather Rizta S 2.9Kwh – ₹ 1,12,811
  • Ather Rizta S 2.9Kwh + Pro – ₹ 1,26,812
  • Ather Rizta S 3.7Kwh – ₹ 1,39,312
  • Ather Rizta Z 2.9Kwh – ₹ 1,28,311
  • Ather Rizta Z 2.9Kwh + pro – ₹ 1,45,312
  • Ather Rizta Z 3.7Kwh – ₹ 1,48,312
  • Ather Rizta Z 3.7Kwh + pro – ₹ 1,68,312

(Ex-showroom)

ஏதெர் ரிஸ்டா ஸ்கூட்டர்

2025 Ather Rizta electric Scooter on-Road Price in Tamil Nadu

2025 ஏதெர் ரிஸ்டா எஸ், ரிஸ்டா இசட்,  ரிஸ்டா இசட் 3.7Kwh என மூன்று விதமான ஸ்கூட்டர்களின் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர், புதுச்சேரி மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

  • Ather Rizta S 2.9Kwh – ₹ 1,20,533
  • Ather Rizta S 2.9Kwh + Pro – ₹ 1,34,554
  • Ather Rizta S 3.7Kwh – ₹ 1,47,689
  • Ather Rizta Z 2.9Kwh – ₹ 1,36,302
  • Ather Rizta Z 2.9Kwh + pro – ₹ 1,53,302
  • Ather Rizta Z 3.7Kwh – ₹ 1,56,578
  • Ather Rizta Z 3.7Kwh + pro – ₹ 1,76,578

(All Price on-road Tamil Nadu)

  • Ather Rizta S 2.9Kwh – ₹ 1,20,742
  • Ather Rizta S 2.9Kwh + Pro – ₹ 1,34,745
  • Ather Rizta S 3.7Kwh – ₹ 1,47,689
  • Ather Rizta Z 2.9Kwh – ₹ 1,36,486
  • Ather Rizta Z 2.9Kwh + pro – ₹ 1,53,486
  • Ather Rizta Z 3.7Kwh – ₹ 1,56,757
  • Ather Rizta Z 3.7Kwh + pro – ₹ 1,76,757

(All Price on-road Pondicherry)

2025 ஏதெர் ரிஸ்டா நுட்பவிபரங்கள்

Ather Rizta SpecsRizta s/Rizta Z/ Rizta Z 3.7kwh
மோட்டார்
வகைஎலெக்ட்ரிக்
மோட்டார் வகைPMSM மோட்டார்
பேட்டரி2.9Kwh/3.7 Kwh Lithium ion
அதிகபட்ச வேகம்80 Km/h
அதிகபட்ச பவர்4.3kw
அதிகபட்ச டார்க்22 Nm
அதிகபட்ச ரேஞ்சு123/159 km per charge (IDC Claimed)
சார்ஜிங் நேரம்4.30 மணி நேரம் (0-80%)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம்டியூப்லெர்
டிரான்ஸ்மிஷன்ஆட்டோமேட்டிக்
ரைடிங் மோட்Zip, Smart Eco
சஸ்பென்ஷன்
முன்பக்கம்டெலிஸ்கோபிக்
பின்பக்கம்மோனோஷாக்
பிரேக்
முன்புறம்டிஸ்க் 200மிமீ
பின்புறம்டிரம் 130 மிமீ (with CBS)
வீல் & டயர்
சக்கர வகைஅலாய்
முன்புற டயர் 90/90-12  ட்யூப்லெஸ்
பின்புற டயர் 100/80-12 ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
ஹெட்லைட்எல்இடி
சார்ஜர் வகைPortable 700W
கிளஸ்ட்டர்7 Inch TFT டிஜிட்டல் கிளஸ்ட்டர்
பரிமாணங்கள்
நீளம்1,850 mm
அகலம்750 mm
உயரம்1140 mm
வீல்பேஸ்1285 mm
இருக்கை உயரம்780 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ்165 mm
பூட் கொள்ளளவு34 Litre
எடை (Kerb)119 kg

ஏதெர் ரிஸ்டாவின் ஸ்கூட்டரின் நிறங்கள்

ரிஸ்டா எஸ் வேரியண்ட் வெள்ளை, கிரே மற்றும் ப்ளூ என மூன்று ஒற்றை வண்ணத்தை பெற்றுள்ள நிலையில் ரிஸ்டா இசட் இந்த மூன்று நிறங்களுடன் கூடுதலாக டூயல் டோன் கொண்ட பச்சை, மஞ்சள், கிரே மற்றும் ப்ளூ என ஒட்டுமொத்தமாக 7 நிறங்கள் உள்ளன.

Ather Rizta Rivals

டிவிஎஸ் ஐக்யூப், ஹீரோ விடா வி2 , ஓலா எஸ்1, சேத்தக், ஆக்டிவா e, ஆகியவற்றுடன் மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை எதிர்கொள்ளுகின்றது.

Faq ஏதெர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஏதெரின் ரிஸ்டா எலெக்ட்ரிக் மைலேஜ் எவ்வளவு ?

ரிஸ்டா 2.9 Kwh பேட்டரி உண்மையான ரேஞ்ச் 90-100 கிமீ வெளிப்படுத்தும், ரிஸ்டா 3,7Kwh மாடலின் உண்மையான ரேஞ்ச் 120 கிமீ வரை கிடைக்கும்.

ரிஸ்தா இ-ஸ்கூட்டரின் பவர் மற்றும் டார்க் விபரம் ?

PMSM மோட்டார் பொருத்தப்பட்டு பவர் 4.3Kw வழங்குகின்றது. டார்க் 22 Nm வழங்குகின்றது.

ஏதெர் ரிஸ்டா ஆன்-ரோடு விலை எவ்வளவு ?

ஏதெர் ரிஸ்டா மின்சார ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை ரூ.1.21 லட்சம் முதல் ரூ.1.77 லட்சம் வரை அமைந்தள்ளது.

Rizta மாடலை சார்ஜ் செய்ய எவ்வளவு நேரம்?

ரிஸ்டா இ-ஸ்கூட்டரின் சார்ஜிங் நேரம் 0-100% பெற 2.9kwh - 8.30 மணி நேரம் ரிஸ்டா 3.7 kwh - 5.45 மணி நேரம்

ரிஸ்டா போட்டியாளர்கள் யார் ?

டிவிஎஸ் ஐக்யூப், ஓலா எஸ்1, ஏதெர் 450, சேத்தக், ஆக்டிவா e, விடா வி2 ஆகியவற்றுடன் மற்ற மின்சார பேட்டரி ஸ்கூட்டர்களை எதிர்கொள்ளும்.

Ather Rizta e scooter Image Gallery