• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

மீண்டும் ஏத்தரின் ரிஸ்தா இ-ஸ்கூட்டர் டீசர் வெளியீடு

by MR.Durai
18 February 2024, 5:03 pm
in Bike News
0
ShareTweetSend

ஏத்தரின் ரிஸ்தா இ-ஸ்கூட்டர்

குடும்பங்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வழக்கமான வடிவமைப்பினை பெற்ற ஏத்தர் ரிஸ்தா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் முக்கிய விபரத்தை மீண்டும் டீசர் மூலம் வெளியிட்டுள்ளது. அடுத்த சில வாரங்களுக்கு பிறகு அறிமுகம் செய்யப்பட உள்ள ரிஸ்தாவில் மிகப்பெரிய சீட் மட்டுமல்லாமல் அகலமான ஃபுளோர் போர்டு உள்ளதை உறுதிப்படுத்தியிருக்கின்றது.

புதிய டீசர் மூலம் ரிஸ்தா பற்றி கிடைத்துள்ள சில விவரங்கள்;

  • ஹெட்லைட்கள் மற்றும் இன்டிகேட்டர் ஆனது அப்ரானில் கீழ் பகுதியில் உள்ளது.
  • விசாலமான ஃப்ளோர்போர்டு
  • இரண்டு பெரியவர்கள் அமர்ந்து செல்லும் வகையிலான பெரிய இருக்கை பில்லியன் ரைடருக்கான கிராப்ரெயில் ஆகியவற்றுடன் வருகிறது.
  • இந்த மாடலுக்கு வழக்கமான பிசிக்கல் கீ உள்ளது.
  • 450எஸ் ஸ்கூட்டரில் உள்ளதை போன்ற டீப்வியூ டிஸ்பிளே பெற்ற கிளஸ்ட்டரை பெற வாய்ப்புள்ளது.
  • ஸ்மார்ட்போன் இணைப்பின் மூலம் பல்வேறு ஏதெர் கனெக்ட் வசதிகளை பெற உள்ளது.

ஏத்தரின் 450s மற்றும் 450X மாடலில் இடம்பெற்றிருக்கின்ற அடிப்படையான மெக்கானிக்கல் மற்றும் பேட்டரி விபரங்களை பகிர்ந்து கொள்ளும் என்பதனால், டாப் ஸ்பீடு மணிக்கு 90 கிமீ வரை வெளிப்படுத்தக்கூடியதாக விளங்க உள்ள ரிஸ்தாவில் 2.9Kwh மற்றும் 3.7Kwh என இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷனை பெற உள்ளது.

3.7Kwh பேட்டரி பெற்ற வேரியண்ட் அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் பயணிக்கும் வரம்பு 140-150 கிமீ வழங்கலாம். அடுத்து குறைந்த விலை 2.9Kwh பேட்டரி கொண்ட மாடலின் பயணிக்கும் வரம்பு 111-125 கிமீ வழங்கலாம்.

அறிமுகம் ஏத்தர் ACDC 24 (Ather Community Day Celebration 2024) கூட்டத்தில் வெளியிடப்பட உள்ள ரிஸ்தா இ-ஸ்கூட்டரின் விலை ரூ.1.20 லட்சத்தில் துவங்கும் என்பதனால் டிவிஎஸ் ஐக்யூப், ஓலா எஸ்1 ஏர் ஆகியவற்றை எதிர்கொள்ளலாம்.

Tags: Ather Energyஏதெர் ரிஸ்டா
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version