• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியை அதிகரிக்கும் பஜாஜ்

by MR.Durai
2 May 2023, 3:38 am
in Bike News
0
ShareTweetSend

2023 bajaj chetak black

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விற்பனை செய்து வருகின்ற சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் மாதாந்திர உற்பத்தி எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. பல்வேறு புதிய நகரங்களிலும் மின்சார ஸ்கூட்டர் சந்தையை விரிவுப்படுத்த உள்ளது.

சமீபத்தில் பஜாஜ் ஆட்டோ நிர்வாக இயக்குனர் ராகேஷ் ஷர்மா, செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், எதிர்கால தேவைகளுக்கு ஈடுகொடுக்கம் வகையிலான சேட்டக் பிளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்டு இலகுவாக மாற்றும் வகையிலான பேட்டரி ஸ்கூட்டர், உட்பட அனைத்து மின்சார ஸ்கூட்டர் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையிலான மாடல்கள் அறிமுகம் செய்ய உள்ளது.

ஜூன் 2023 முதல் பஜாஜ் சேட்டக் இ-ஸ்கூட்டரின் உற்பத்தியை ஒரு மாதத்திற்கு 10,000 யூனிட்டுகளுக்கு மேல் அதிகரிக்க உள்ளது.  இந்நிறுவனம் அதன் EV விநியோகச் சங்கிலியை மறுசீரமைப்பு செய்வதனை உறுதிப்படுத்தியது. உற்பத்தியை அதிகரிப்பதனால் செலவுகளைக் குறைக்க உதவும்.

2023 Bajaj Chetak

சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3 கட்ட PMSM மோட்டார் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 5 bhp பவர் மற்றும் 20 Nm டார்க் வழங்குகின்றது. இதன் அதிகபட்ச வேகம் 63km/h ஆக உள்ளது. சமீபத்தில் வந்த புதிய மாடலின் ரேஞ்சு 108 கிமீ ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்பாக இந்த மாடல் முன்பாக 90 கிமீ வழங்கி வந்தது.

போட்டியாளர்கள் சிறப்பான ரேஞ்சு அதிகப்படியான வேகத்தை வழங்கி வருவதனால் சேட்டக் ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கை பெரிய அளவில் பதிவு செய்யவில்லை.

2023 பஜாஜ் சேட்டக் பிரீமியம் வேரியண்ட் விலை ₹. 1.51 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் சென்னை)

Tags: Bajaj ChetakElectric Scooter
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version