சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வாரண்டி உட்பட மேலும் சில முக்கிய விபரங்கள்

பஜாஜ் சேத்தக்

பஜாஜ் ஆட்டோவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலான சேட்டக் விற்பனைக்கு ஜனவரி மாதம் வெளியிடப்பட உள்ள நிலையில் முதற்கட்டமாக புனே, பெங்களூரு நகரங்களை தொடர்ந்து பல்வேறு முன்னணி நகரங்களில் விற்பனைக்கு கிடைக்க உள்ள நிலையில் முழுமையான சேட்டக் டெக் விபரங்கள் வெளியாகவில்லை.

சக்கனில் அமைந்துள்ள பெண்கள் மட்டும் கொண்ட தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்ற சேட்டக் ஸ்கூட்டர்கள் மிகவும் அமைதியான தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றது. மாதம் 1,500 யூனிட்டுகள் முதற்கட்டமாக தயாரிக்கவும் படிப்படியாக உற்பத்தியை அதிகரித்து இந்தியா முழுவதும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் பஜாஜ் திட்டமிட்டு வருகின்றது.

சேட்டக் ஸ்கூட்டரில் 4 கிலோ வாட் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டு தூசு மற்றும் நீரினால் எவ்வித பாதிப்பு ஏற்படாத IP67 சான்றிதழ் பெற்ற உயர்தரமான லித்தியம் அயன் பேட்டரியுடன் நிக்கல் கோபாலட் அலுமினியம் ஆக்ஸைடு (Nickel Cobalt Aluminium Oxide -NCA) செல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பேட்டரியை நீக்கும் வகையில் வழங்கப்படவில்லை.

இந்த ஸ்கூட்டரினை பேட்டரியை 5-15 ஆம்ப் மின்சாரத்தின் மூலம் சார்ஜ் செய்வதற்கான அம்சம் வழங்கப்பட்டுள்ளது. ஆன்-போர்டு நுண்ணறிவு பேட்டரி மேலாண்மை அமைப்பு (Intelligent Braking Management System- IBMS) மற்றும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் (regenerative braking) சிஸ்டத்தை கூடுதலாக பெற்றுள்ளது.

சேட்டக் ஸ்கூட்டரில் ஈக்கோ மற்றும் ஸ்போர்ட் என இரண்டு ரைடிங் மோடுகள் மற்றொரு ரிவர்ஸ் அசிஸ்ட் மோடும் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 60 கிமீ வேகத்தில் பயணிக்கின்ற ஸ்போர்ட் மோட் மூலம் 85 கிமீ பயண தூரத்தையும், அதுவே ஈக்கோ மோட் மூலம் 45-50 கிமீ வேகத்தில் பயணித்தால் 95 – 100 கிமீ வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டர் ரேஞ்சு 120 கிமீ ஆக அறிமுகம் செய்யப்படலாம்.

சேத்தக் ஸ்கூட்டருக்கு என தனியான கீ வழங்கப்படாமல் அதற்கு மாற்றாக ரிவோல்ட் ஆர்வி400 பைக்கில் உள்ளதை போன்றே கீ ஃபாப் வழங்கப்படும். இதன் மூலமாகவே ஆட்டோ முறையில் ஸ்கூட்டரை லாக் செய்வது தொடங்கி ஸ்டார்ட் செய்வது வரை நடைபெற உள்ளது. மிக கடுமையான நெரிசல் மிகுந்த இடத்தில் இலகுவாக பார்க்கிங் செய்வதற்காக ரிவர்ஸ் கியர் மோட் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 4-5 கிமீ வேகத்தில் பயணிக்க உதவும்.

சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம்பெற உள்ள பேட்டரி மற்றும் மோட்டாருக்கு 3 வருட வாரண்டி அல்லது 50,000 கிமீ வழங்கப்படவும், பேட்டரியின் ஆயுள் 70,000 கிமீ ஆக விளங்க உள்ளது. மேலும், ஒவ்வொரு 15,000 கிமீ ஒரு முறை சர்வீஸ் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மொத்தம் 6 விதமான நிறங்களில் வரவுள்ள சேட்டக் ஸ்கூட்டரின் அப்ரானில் 2403 என்ற எண் பதிக்கப்பட்டுள்ளது. அதீக பெர்ஃபாமென்ஸை வெறிப்படுத்துகின்ற கேடிஎம் மற்றும் ஹஸ்குவர்னா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ராஜீவ் பஜாஜ் குறிப்பிட்டுள்ளார்.

பஜாஜ் சேத்தக் விலை ரூ.1.30 லட்சத்தில் அமையலாம். தமிழகத்தை பொறுத்தவரை அடுத்த ஆண்டின் மத்தியில் இந்த ஸ்கூட்டர் வெளியாகலாம்.

Exit mobile version