• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

பிஎஸ் 6 ஹீரோ HF டீலக்ஸ் பைக் ரூ.55,925 ஆரம்ப விலையில் வெளியானது

by MR.Durai
31 December 2019, 3:19 pm
in Bike News
0
ShareTweetSend

Hero Hf Deluxe Bs Vi

ஹீரோ மோட்டோகார்ப், தனது அடுத்த பிஎஸ் 6 மாடலாக HF டீலக்ஸ் பைக்கினை இரண்டு விதமான வேரியண்டில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. முன்பாக ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பிஎஸ்6 பைக் விற்பனைக்கு கிடைத்து வருகின்றது.

புதிய HF டீலக்ஸ் பைக்கில் மிக சிறப்பான வகையில் ரைடிங் டைனமிக்ஸ் மேம்படுத்தப்பட்டு புதிய 100 சிசி என்ஜின் எக்ஸ்சென்ஸ் டெக்னாலாஜி (Xsens Technology – 10 சென்சார்களை) பெற்றதாக ஃப்யூவல் இன்ஜெக்‌ஷனை (Programmed Fuel Injection system) கொண்டு அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்மில் 7.94 பிஹெச்பி பவர் மற்றும் 8.04 என்எம் டார்க் வெளிப்படுத்தும் என்ஜினை கொண்டுள்ளது. மேலும் எரிபொருளை சேமிக்க i3S (idle start-stop system) நுட்பத்தை கொண்டுள்ளது. இது முந்தைய மாடலை விட 6 சதவீத கூடுதலான வேகத்தையும், 9 சதவீத கூடுதல் மைலேஜ் வழங்கும் என இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் மோட்டார் சைக்கிள் மற்ற அம்சங்களை பொறுத்தவரை எந்த மாற்றமும் இல்லாமல் வந்துள்ளது. டீயூப்லர் டபுள் கார்டில் அடிச்சட்டகத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பைக் டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் அப் மற்றும் பின்புறத்தில் இரட்டை ட்வீன் ஷாக் அப்சார்பர் கொண்டுள்ளது.

ஹீரோவின்  ஐபிஎஸ் எனப்படுகின்ற ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டத்தினை பெற்று இருபக்க டயர்களிலும் டிரம் பிரேக்குகளால் பிரேக்கிங் அம்சத்தை கொண்டுள்ளது. கிரவுண்ட் கிளியரண்ஸ் 165 மிமீ மற்றும் வீல்பேஸ் 1,235 மிமீ ஆகியவற்றில் மாற்றமில்லை. தோற்ற வடிவமைப்பு மற்றபடி வசதிகளில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் புதிய கிராபிக்ஸ் மற்றும் டெக்னோ ப்ளூ மற்றும் ஹெவி கிரே என இரண்டு புதிய நிறங்களுடன், கருப்பு உடன் சிவப்பு, கருப்பு உடன் பர்பிள் மற்றும் கருப்பு உடன் கிரே நிறங்களைப் பெறுகிறது.

பிஎஸ்6 ஹீரோ HF டீலக்ஸ் விலை பட்டியல்

செல்ஃப் ஸ்டார்ட் உடன் அலாய் வீல் ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் மாடல் ரூ. 55,925

செல்ஃப் ஸ்டார்ட் அலாய் வீல் உடன் ஐ3எஸ் ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் மாடல் ரூ. 57,250

(எக்ஸ்ஷோரூம் டெல்லி விலை)

முந்தைய பிஎஸ் 4 மாடலை விட ரூ.7,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 2020 முதல் வாரத்தில் நாடு முழுவதும் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் டீலர்களிடம் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. இந்நிறுவனத்தின் மற்ற மாடல்கள் அடுத்த சில வாரங்களில் பிஎஸ் 6 நடைமுறைக்கு மாற்றப்பட உள்ளது.

Tags: Hero HF Deluxe
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version