• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ஸ்டைலான ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரின் சிறப்புகள்

by MR.Durai
13 May 2019, 12:39 pm
in Bike News
0
ShareTweetSend

 hero-maestro-edge-125-launched

125சிசி என்ஜின் பெற்ற ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரில் எஃப்ஐ மற்றும் கார்புரேட்டர் என இரு விதமான என்ஜின் தேர்வுடன் ஸ்டைலிஷான அம்சங்களை பெற்று கூடுதல் பவரையும் வெளிப்படுத்துகின்றது.

மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள 125சிசி என்ஜின் கொண்ட இந்த  மாடலில் கார்புரேட்டர் பொருத்தப்பட்ட மாடலை விட ஃப்யூவல் இன்ஜெக்டர் பொருத்தப்பட்ட வேரியன்ட் 0.40 ஹெச்பி கூடுதல் குதிரைத்திறன் வெளிப்படுத்துகின்றது.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 சிறப்புகள்

124சிசி என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக  8.7hp மற்றும் 10.2Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும். இந்த என்ஜின் கார்புரேட்டர் மற்றும் எஃப்ஐ என இரண்டிலும் கிடைக்கின்றது. எஃப்ஐ பெற்ற மாடல் 9.2 hp மற்றும் 10.2Nm முறுக்குவிசை வெளிப்படுத்துகின்றது.

இந்தியாவில் முதல்முறையாக கார்புரேட்டர் மாடலை விட கூடுதல் பவரை வெளிப்படுத்தும் முதல் ஸ்கூட்டர் மாடலாக மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விளங்குகின்றது. முன்பாக 2018 டெல்லி ஆட்ட எக்ஸ்போவில் வெளியான அடிப்படையில் தொடர்ந்து பெரிதாக எந்த மாற்றங்ளும் இல்லாமல் விற்பனைக்கு வந்துள்ளது.

வெளிபுறத்தில் எரிபொருள் நிரப்பும் வசதி, டிஜிட்டல் அனலாக் கிளஸ்ட்டர், யூஎஸ்பி சார்ஜிங், இருக்கை அடியில் உள்ள ஸ்டோரேஜ் பகுதியில் சிறிய விளக்கு போன்றவற்றுடன் ஸ்டைலிஷான் தோற்றம் மற்றும் மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட நான்கு நிறங்கள் கொண்டதாக விளங்குகின்றது.

ஹீரோவின் எரிபொருளை சேமிக்கும் நுட்பமான ஹீரோ i3S ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம் அல்லது  i3S start-stop சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டு நேர்த்தியாக வந்துள்ள இந்த ஸ்கூட்டரின் விலை பட்டியல் பின் வருமாறு :-

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ரூ. 58,500 (டிரம் பிரேக்)

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ரூ.  60,000 (டிஸ்க் பிரேக்)

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 FI ரூ. 62,700

(எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

ஹோண்டா கிரேசியா, டிவிஎஸ் என்டார்க், அப்ரிலியா எஸ்ஆர் 125, போன்ற மாடல்களுக்கு போட்டியாக வந்துள்ள ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 முன்பதிவு மே 16ந் தேதி முதல் தொடங்குகின்றது.

மேலும் படிங்க – பெண்களுக்கான ஸ்டைலிஷ் ஹீரோ பிளெஷர் பிளஸ் சிறப்புகள்

 

Tags: Hero Maestro Edge 125
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version