• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ஸ்டைலிஷான ஹீரோ எக்ஸ்ட்ரீம் 250R அறிமுகமானது

by MR.Durai
5 November 2024, 10:38 pm
in Bike News
0
ShareTweetSend

2025 hero xtreme 250r

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள 30bhp பவரை வெளிப்படுத்துகின்ற நேக்டூ ஸ்போர்ட்டிவ் எக்ஸ்ட்ரீம் 250R பைக்கினை EICMA 2024 கண்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது.

எக்ஸ்ட்ரீம் 250ஆர் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள புதிய 250cc, DOHC, லிக்யூடு கூல்டு ஒற்றை சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 9,250rpm-ல் 30 bhp பவர் மற்றும் 7,250rpm-ல் 25 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.  இந்த எஞ்சின் 0-60 கிமீ வேகத்தை 3.25 வினாடிகளில் எட்டும் என்று ஹீரோ குறிப்பிடுகின்றது. இதே எஞ்சின் ஃபேரிங் ஸ்டைலை கொண்ட கரீஸ்மா XMR 250 பகிர்ந்து கொள்ளுகின்றது.

முன்புறத்தில் 43 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் ப்ரீலோட் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் கொண்டுள்ள இந்த மாடலை ஸ்டீல் டிரெல்லிஸ் ஃப்ரேம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த  பைக் அகலமான ரேடியல் டயர்களுடன் 17 அங்குல அலாய் வீல் உடன் முன்புறம் மற்றும் பின்புறம் டிஸ்க் பிரேக் உடன் சுவிட்சபிள் ஏபிஎஸ் முறைகளுடன் வருகிறது.

எக்ஸ்ட்ரீம் 250R மாடலுக்கு போட்டியாக பல்சர் 250 பைக்குகள், கேடிஎம் 250 டியூக் மற்றும் சுசூகி ஜிக்ஸெர் 250 போன்றவை உள்ளது. இந்திய சந்தையில் விற்பனைக்கு ரூ.2.20- லட்சத்தில் வரக்கூடும்.

Tags: Hero BikeHero Xtreme 250R
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version