Automobile Tamilan

ஹோண்டா ஸ்கூட்டர்களின் ஆன்-ரோடு விலை பட்டியல்

honda scooters on road price list

இந்தியாவின் முதன்மையான ஸ்கூட்டர் தயாரிப்பாளரான ஹோண்டா நிறுவனத்தின் ஸ்கூட்டர் மாடல்களின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை பட்டியல், என்ஜின், மைலேஜ் உட்பட அனைத்து விபரங்களை தொகுத்து அறிந்து கொள்ளலாம்.

ஸ்கூட்டர் சந்தையில் முதன்மையான ஆக்டிவா 110 ஸ்கூட்டர் உட்பட ஆக்டிவா 125, டியோ 110, டியோ  என மொத்தம் நான்கு ஸ்கூட்டர்களும் கூடுதலாக எலக்ட்ரிக் வெர்ஷனில் QC1, ஆக்டிவா e விற்பனை செய்து வந்தாலும் இரண்டு மின்சார ஸ்கூட்டர்களும் தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படவில்லை.

2025 Honda Activa

இந்தியாவின் முதன்மையான ஸ்கூட்டர் மாடலாக விளங்கும் ஆக்டிவா ஸ்கூட்டரில் H-smart எனப்படுகின்ற ரிமோட் மூலம் இயங்கும் வசதி கொண்ட வேரியண்ட் STD மற்றும் DLX என மொத்தம் மூன்று விதமான வேரியண்ட் கிடைக்கின்றது. புதிதாக வந்துள்ள OBD-2B மாடலில் 4.2 அங்குல டிஎஃப்டி கிளஸ்ட்டருடன் கனெக்ட்டிவிட்டி வசதி உள்ளது.

டிரம் பிரேக்கினை மட்டும் பெற்றுள்ள ஆக்டிவா ஸ்கூட்டரின் போட்டியாளர்கள் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் வழங்கி வருகின்றனர். ஆக்டிவா ஸ்கூட்டரின் போட்டியாளர்கள் டிவிஎஸ் ஜூபிடர், ஹீரோ பிளெஷர் பிளஸ், ஜூம் 110 மற்றும் டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 ஆகும். இந்த மாடலின் விலை ரூ.85,276 முதல் ரூ.98,296 (எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு) ஆகும்

2025 Honda Activa
என்ஜின் (CC) 109.51 cc
குதிரைத்திறன் (bhp@rpm) 7.72 bhp @ 8000 rpm
டார்க் (Nm@rpm) 8.90 Nm @ 5500 rpm
கியர்பாக்ஸ் CVT
மைலேஜ் 48 Kmpl

2025 ஹோண்டா ஆக்டிவா 110 ஸ்கூட்டரின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 1,05,643 முதல் ₹ 1,19,231 வரை ஆகும்.

2025 Honda Activa 125

125cc சந்தையில் உள்ள ஆக்டிவா 125 ஸ்கூட்டரிலும் ரிமோட் மூலம் இயங்கும் வசதிகள் கொடுக்கப்பட்டு டிரம் மற்றும் டிஸ்க் பிரேக் என இரு விதமான பிரேக்கிங் ஆப்ஷனுடன் மிக நேர்த்தியாக அலாய் வீல் உடன் 4.2 அங்குல டிஎஃப்டி கிளஸ்ட்டருடன் கனெக்ட்டிவிட்டி வசதிகளை கொண்டுள்ளது.

இந்த பிரிவில் போட்டியாக சுசூகி ஆக்செஸ் 125, யமஹா ஃபேசினோ, டிவிஎஸ் ஜூபிடர் 125, ஹீரோ டெஸ்டினி 125 போன்றவை விற்பனையில் உள்ளது. இந்த மாடலின் விலை ரூ.99,990 முதல் ரூ.1,04,784 (எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு) ஆகும்

2025 Honda Activa 125
என்ஜின் (CC) 123.92 cc
குதிரைத்திறன் (bhp@rpm) 8.31 hp @ 6250 rpm
டார்க் (Nm@rpm) 10.5 Nm @ 5000 rpm
கியர்பாக்ஸ் CVT
மைலேஜ் 46 Kmpl

2025 ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 1,21,218 முதல் ₹ 1,28,456 வரை ஆகும்.

2025 Honda Dio 110

பிரசத்தி பெற்ற டியோ ஸ்கூட்டரில் 110சிசி என்ஜின் பெற்றதாக இளைய தலைமுறையினரை கவரும் வகையில் கிடைக்கின்ற இந்த மாடலில் டிரம் பிரேக் ஆப்ஷன் மட்டுமே உள்ளது. கூடுதலாக இந்த ஸ்கூட்டரில் பாடி ஸ்டிக்கரிங் பெற்றிருப்பதுடன் 4.2 அங்குல டிஎஃப்டி கிளஸ்ட்டருடன் கனெக்ட்டிவிட்டி வசதியும் உள்ளது.

டியோ 110 ஸ்கூட்டருக்கு ஹீரோ ஜூம் 110 சவாலாக உள்ள நிலையில் மற்ற 110சிசி மாடல்களும் போட்டியாக உள்ளது. இந்த மாடலின் விலை ரூ.80,777 முதல் ரூ.92,133 (எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு) ஆகும்

2025 Honda Dio 110
என்ஜின் (CC) 109.51 cc
குதிரைத்திறன் (hp@rpm) 7.84 hp @ 8000 rpm
டார்க் (Nm@rpm) 9.03 Nm @ 5500 rpm
கியர்பாக்ஸ் CVT
மைலேஜ் 47 Kmpl

2025 ஹோண்டா டியோ 110 ஸ்கூட்டரின் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை ₹ 99,653 முதல் ₹ 1,12,210 வரை ஆகும்.

2025 Honda Dio 125

125சிசி சந்தையில் கிடைக்கின்ற மற்றொரு ஹோண்டா ஸ்கூட்டர் டியோ 110 அடிப்படையிலான டியோ 125 ஸ்போர்ட்டிவான தோற்ற அமைப்பினை கொண்டதாக விற்பனை செய்யப்படுவதுடன் புதிதாக வந்துள்ள OBD-2B மாடலில் 4.2 அங்குல டிஎஃப்டி கிளஸ்ட்டருடன் கனெக்ட்டிவிட்டி வசதி உள்ளது.

ஹோண்டா டியோ 125 ஸ்கூட்டரின் போட்டியாளராக ஜூம் 125, டிவிஎஸ் என்டார்க் 125, சுசூகி அவெனிஸ், சுசூகி பர்க்மேன் ஸ்டீரிட், யமஹா ரே ZR, மற்றும் டெஸ்ட்டினி 125 போன்றவை உள்ளது. இந்த மாடலின் விலை ரூ.99,176 முதல் ரூ.1,04,571 (எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு) ஆகும்

2025 Honda Dio 125
என்ஜின் (CC) 123.92 cc
குதிரைத்திறன் (hp@rpm) 8.19 bhp @ 6000 rpm
டார்க் (Nm@rpm) 10.5 Nm @ 5000 rpm
கியர்பாக்ஸ் CVT
மைலேஜ் 46 Kmpl

2025 ஹோண்டா டியோ 125 ஸ்கூட்டரின் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை ₹ 1,21,157 முதல் ₹ 1,27,760 வரை ஆகும்.

கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆன்-ரோடு விலை பட்டியலும் தமிழ்நாட்டின் தோராயமானதாகும்.. எனவே விலை விபரம் டீலர்களுக்கு டீலர் மாறுபடும்.. துல்லியமான விலையை அறிய டீலரை அனுகுங்கள்.

last updated – 16/06/2025

Exit mobile version