650சிசி ராயல் என்ஃபீல்டு க்ரூஸர் பைக் சோதனை ஓட்டம்

d6820 re cruiser 650

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் பல்வேறு புதிய மாடல்களை சோதனை செய்து வரும் நிலையில் 650சிசி இன்ஜின் பெற்ற ராயல் என்ஃபீல்டு க்ரூஸர் பைக்கினை சாலை சோதனை ஓட்ட படங்கள் மீண்டும் கசிந்துள்ளது.

முன்பாக வெளிவந்த படங்களை விட தற்போது வெளியாகியுள்ள ராயல் என்ஃபீல்டு 650 க்ரூஸர் மாடல் மிகவும் தனித்துவமான ரெட்ரோ தோற்ற அமைப்பில் வட்ட வடிவ ஹெட்லைட், இரட்டை வட்ட வடிவ கிளஸ்ட்டர் அமைப்பினை கொண்டிருக்கின்றது. அடுத்தப்படியாக முன்புறத்தில் யூஎஸ்டி ஃபோர்க் , பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர் மிகவும் கோண வடிவ முறையில் இணைக்கப்பட்டுள்ளது.

முன்புற வீல் சற்று உயரம் அதிகமாகவும், பின்புற வீல் உயரம் குறைவாக அமைந்து, ஃபூட் ரெஸ்ட் முன்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இன்ஜினை பொறுத்தவரை முன்பாக விற்பனையில் உள்ள இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டினல் ஜிடி மாடல்களில் உள்ள அதிகபட்சமாக 47 ஹெச்பி குதிரை திறன் ஆற்றலை வெளிப்படுத்த அதிகபட்சமாக 7100 ஆர்பிஎம் சுழற்சியில் வழங்குவதுடன், குறைந்தபட்ச 4000 ஆர்பிஎம் சுழற்சியில் அதிகப்படியான 52 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.

இதே இன்ஜினை புதிய 650 க்ரூஸர் ரக மாடலை ராயல் என்ஃபீல்டு பயன்படுத்த உள்ளது. இந்திய சந்தையில் 2021 ஆம் ஆண்டின் மத்தியில் ரூ.3.30 லட்சத்தில் விற்பனைக்கு வெளி வரலாம்.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் முந்தைய தண்டர்பேர்டு மாடலுக்கு மாற்றாக புதிய மீட்டியோர் 350 அடுத்த சில வாரங்களுக்குப் பிறகு விற்பனைக்கு வரவுள்ளது. மேலும், புதிய கிளாசிக் 350 பைக் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகலாம். ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 250சிசி இன்ஜின் பெற்ற மாடல் திட்டத்தை இந்நிறுவனம் கைவிட்டுள்ளது.

web title : Royal Enfield 650 cruiser spied details

For the latest Tamil auto news and Bike reviews, follow automobiletamilan.com on TwitterFacebook, and subscribe to our YouTube channel.

Exit mobile version