Automobile Tamilan

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 பைக்கின் எதிர்பார்ப்புகள்

TVS Apache RTR 310

நேக்டூ ஸ்டைலை பெற்ற டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 பைக்கினை விற்பனைக்கு ஜனவரி 6 ஆம் தேதி வெளியிட உள்ளது. பிஎம்டபிள்யூ மோட்டார்டு- டிவிஎஸ் மோட்டார் கூட்டணியில் தயாரிக்கப்பட்டுள்ள 310cc பிரிவில் வருகின்ற அப்பாச்சி RTR 310 மாடல் விற்பனையில் உள்ள பிஎம்டபிள்யூ G 310 R என்ஜினை பகிர்ந்து கொள்ள உள்ளது.

RTR 310 பைக்கில் விற்பனையில் உள்ள ஜி310ஆர் மாடலை விட சற்று மாறுபட்ட வகையிலான டிசைன் அம்சங்களை பெற்றதாக வரவுள்ளது.

TVS Apache RTR 310

அப்பாச்சி ஆர்டிஆர் 310 பைக் மாடலில் 313சிசி என்ஜின்  33.5 bhp பவரை 9,250 rpm மற்றும் 28 Nm டார்க் ஆனது 7,500 rpm-ல் வழங்கும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு சிலிப்பர் கிளட்ச் அசிஸ்ட் பொருத்தப்பட்டிருக்கும்.

கூர்மையான வடிவமைப்பாக உள்ளது, பெட்ரோல் டேங்க் அமைப்பில் நீட்டிப்புகள் மற்றும் குறைந்தபட்ச டெயில் நீளம் பெற்றுள்ளது. கோல்டன் நிறத்திலான யூஎஸ்டி ஃபோர்க்கு மற்றும் இரு டயர்களிலும் டிஸ்க் பிரேக் பெற்று டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்டிருக்கும். அப்பாச்சி ஆர்ஆர்310 போல இந்த பைக்கிலும் கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளுடன் அகலமான கிளஸ்ட்டர் அமைந்திருக்கும்.

கேடிஎம் 390 டியூக், ட்ரையம்ப் ஸ்பீடு 400, பிஎம்டபிள்யூ G 310 R, கீவே K300N மற்றும் ஹோண்டா CB300R ஆகியவற்றுடன் சந்தையை பகிர்ந்து கொள்ள உள்ளது.

Exit mobile version