இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ மோட்டார்டு நிறுவனம் G310 R, G310 GS, மற்றும் G310 RR ஆகிய மூன்று பைக்குகளிலும் புதிய நிறங்கள் பெற்றதாக அறிமுகம் செய்துள்ளது. விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் வந்துள்ளது.
சில வாரங்களுக்கு முன்னதாக பல்வேறு சர்வதேச சந்தைகளில் ஜி 310 ஆர், ஜி 310 ஜிஎஸ் மற்றும் ஜி310 ஆர்ஆர் என மூன்று மாடல்களிலும் புதிய நிறங்களை இந்நிறுவனம் சேர்த்திருந்தது. இந்த மாடல்கள் டிவிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ கூட்டணியில் உருவாக்கப்பட்டதாகும்.
2023 BMW G310 RR
முழுமையாக ஃபேரிங் செய்யபட்ட ஸ்போர்ட்டிவ் ஜி 310 ஆர்ஆர் பைக்கில் காஸ்மிக் பிளாக் 2 என்ற புதிய நிறத்தை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பைக்கில் மற்ற எந்தவொரு டிசைன் மாற்றங்களும் இல்லை.
மிகவும் ஸ்போர்ட்டிவான பெர்ஃபாமென்ஸை வழங்குகின்ற G310 RR பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 313சிசி என்ஜின் 34 bhp பவரை 9,700 rpm மற்றும் 27 Nm டார்க் ஆனது 7,700 rpm-ல் வழங்குகின்றது. 2023 பிஎம்டபிள்யூ G310 RR விலை ரூ.3 லட்சம் முதல் துவங்குகின்றது.
2023 BMW G310 GS
அட்வென்ச்சர் ஸ்டைலிங் பெற்ற ஜி 310ஜிஎஸ் பைக்கில் உள்ள 313சிசி என்ஜின் 33.5 bhp பவரை 9,250 rpm மற்றும் 28 Nm டார்க் ஆனது 7,500 rpm-ல் வழங்குகின்றது. ரேசிங் ரெட் என்ற புதிய நிறத்துடன் கிடைக்கின்ற பைக்கின் ஆரம்ப விலை ரூ.3.25 லட்சத்தில் துவங்குகின்றது.
2023 BMW G310 R
அடுத்து, நேக்டூ ஸ்ட்ரீட் பைக் மாடலான ஜி 310 ஆர் பைக்கில் 313சிசி என்ஜின் 33.5 bhp பவரை 9,250 rpm மற்றும் 28 Nm டார்க் ஆனது 7,500 rpm-ல் வழங்குகின்றது. G310 R பைக்கின் விலை ரூ.2.85 லட்சத்தில் துவங்குகின்றது.