வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி விற்பனைக்கு வெளியாக உள்ள டிவிஎஸ் அப்பாச்சி RTR 310 பைக்கினை அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில், ஆர்டிஆர் 310 முன்பதிவு கட்டணமாக ரூ.3,100 வசூலிக்கப்படுகின்றது.
பிஎமடபிள்யூ மோட்டார்டு மற்றும் டிவிஎஸ் கூட்டணியில் உருவான 310 வரிசை மாடல்களில் இரண்டாவது மாடலாக நேக்டூ ஸ்போர்ட்டிவ் ஆர்டிஆர் 310 வரவுள்ளது. முன்பாக ஃபேரிங் ஸ்டைல் RR 310 விற்பனைக்கு உள்ளது.
TVS Apache RTR 310
ஏற்கனவே விற்பனையில் கிடைக்கின்ற பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக்கின் அடிப்படையில் வரவிருக்கும் அப்பாச்சி ஆர்டிஆர் 310 டீசர் தொடர்ந்து சமூக ஊடகத்தில் இந்நிறுவனம் வெளியிட்டு வருகின்றது.
அப்பாச்சி ஆர்டிஆர் 310 மாடலில் 313சிசி என்ஜின் 33.5 bhp பவரை 9,250 rpm மற்றும் 28 Nm டார்க் ஆனது 7,500 rpm-ல் வழங்கும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு சிலிப்பர் கிளட்ச் அசிஸ்ட் பொருத்தப்பட்டிருக்கும்.
நேக்டூ ஸ்டைலை பெறுகின்ற மாடல் மிக நேர்த்தியாக எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி டெயில் லைட் பெற்று இருபிரிவுகளை பெற்ற இருக்கை மற்றும் டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்றிருக்கும்.
வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 விலை ரூ.2.95 லட்சத்திற்குள் அமையலாம். சமீபத்தில் டிவிஎஸ் நிறுவனம் எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.