டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய X எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் விலை ரூ.2.50 லட்சத்தில் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டதாக விற்பனைக்கு வெளியாகியுள்ளது. எக்ஸ் பேட்டரி மின்சார ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு 105 Km/hr பெற்று ஏபிஎஸ், ஆஃப் செட் மோனோஷாக் சஸ்பென்ஷன் உட்பட க்ரூஸ் கண்ட்ரோல் ஆகியவற்றை பெற்றுள்ளது.
க்ரீயோன் எலக்ட்ரிக் கான்செப்ட்டை உற்பத்தி நிலைக்கு எடுத்துச் சென்றுள்ள டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பல்வேறு நவீனத்துவமான அம்சங்கள் முதன்முறையாக பல்வேறு வசதிகளை பெற்று மூன்று விதமான ரைடிங் மோடுகளை பெற்றுள்ளது.
TVS X Electric Scooter
டிவிஎஸ் அறிமுகம் செய்துள்ள XLeton பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய எக்ஸ் எலக்ட்ரிக் மாடலில் 4.4 Kwh பேட்டரி கொண்டு 7 kw பவரை வழங்கும் PMSM மோட்டார் அதிக்கப்படியான பவர் 11 Kw வெளிப்படுத்தும் நிலையில், அதிகபட்ச வேகம் மணிக்கு 105 கிமீ பெற்று முழுமையான சிங்கிள் சார்ஜில் 140 கிமீ ரேஞ்சு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 0-40 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 2.6 வினாடிகள் போதுமானதாக உள்ளது. 950W சார்ஜரை கொண்டு 0-80 % சார்ஜிங் செய்ய 3 மணி நேரம் 40 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். ஹோம் ரேபிட் சார்ஜர் 3 KW பயன்படுத்துவதன் மூலம் 0-50 % சார்ஜிங் பெற 50 நிமிடங்கள் போதுமானதாகும்.
X எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஸ்டெல்த், ஸ்டிரைட் மற்றும் சோனிக் என மூன்று விதமான ரைடிங் மோடுகளை பெற்றுள்ளது. TVS X மாடலில் 10.25-இன்ச் TFT கிளஸ்ட்டரை பெறுகிறது. ரைடருக்கு ஏற்றவாறு எந்த கோணத்திலும் சரிசெய்யப்படும் வகையில் X-tilt அம்சத்துடன் பிரமாண்டமான டேஷில் புளூடூத் இணைப்பு, இசையை இயக்குதல் மற்றும் நேவிகேஷன், விழிப்பூட்டல்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
முன்புறத்தில் டெலிஸ்கோபிக் போர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனை பெற்ற எக்ஸ் பேட்டரி ஸ்கூட்டரில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் முன்புறத்தில் 220 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 195 மிமீ டிஸ்க் உள்ளது. 12 அங்குல அலுமினிய அலாய் வீலின் முன்புறத்தில் 100/80-12 மற்றும் பின்புறத்தில் 110/80-12 டயர் உள்ளது.
1285 மிமீ வீல்பேஸ் கொண்ட டிவிஎஸ் எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் கிரவுண்ட் கிளியரண்ஸ் 175 மிமீ மற்றும் இருக்கை உயரம் 770 மிமீ ஆக உள்ளது.
டிவிஎஸ் எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ₹ 2,49,900 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் கட்டணம் ரூ.5000 வசூலிக்கப்படுகின்றது. வரும் நவம்பர் 2023-ல் டெலிவரி துவங்கப்பட உள்ளது. கூடுதலாக போர்ட்டபிள் சார்ஜரின் விலை ரூ.16,275 (ஜிஎஸ்டி உட்பட) ஆகும்.
முதலில் பெங்களூருவில் டெலிவரி துவங்கப்பட்டு, 2024 மார்ச் முதல் இந்தியா முழுவதும் விநியோகம் தொடங்கும். முதல் 2,000 உரிமையாளர்களுக்கு ரூ.18,000 மதிப்புள்ள ‘கியூரேட்டட் கன்சியர்ஜ்’ பேக்கேஜ் மூலம் ஸ்மார்ட்வாட்ச் இலவசமாக கிடைக்கும்.