இந்தியாவின் முன்னணி ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது பிரபலமான ஸ்கூட்டர் வரிசைகளில் ஒன்றான ஆரம்ப நிலை S1X மாடலின் ரேஞ்ச் வெளிப்படுத்தும் 2kwh பேட்டரி கொண்டுள்ள மாடலை பண்டிகை காலத்தை முன்னிட்டு BOSS (Biggest Ola Season Sale) சிறப்பு விற்பனைச் சலுகையாக ரூபாய் 49,999 ஆக விலையை குறைத்துள்ளது
ரூ.50,000 விலைக்குள் அமைந்துள்ள தற்காலிக விலை குறைப்பு ஸ்டாக் கையிருப்பில் உள்ளவரை மட்டுமே கிடைக்கும் என ஓலா நிறுவனம் குறிப்பிடுகின்றது..
2kwh பேட்டரி பேக் கொண்ட வேரியண்ட் அதிகபட்சமாக 95 கிமீ ரேஞ்ச் வழங்கும் என குறிப்பிட்டுள்ள நிலையில் உண்மையான ரேஞ்ச் 65-75 கிமீ வழங்கும் நிலையில் இந்த மாடலின் டாப் ஸ்பீடு 85 கிமீ ஆக உள்ளது.
இன்று முதல் இந்த S1X இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.