Automobile Tamilan

டிவிஎஸ் நிறுவன ரைடர் 125 ஃபிளெக்ஸ் ஃப்யூவல் அறிமுகம்

TVS Raider 125 flex-fuel

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 2024 பாரத் மொபைலிட்டி அரங்கில் பிரசத்தி பெற்ற ரைடர் 125 பைக்கின் அடிப்படையில் 85 % எத்தனால் கொண்டு இயங்கும் ஃபிளெக்ஸ் ஃப்யூவல் நுட்பத்தை FFT என்ற பெயரில் காட்சிக்கு கொண்டு வந்துள்ளது.

பல்வேறு இந்திய தயாரிப்பாளர்கள் எத்தனால் கலந்த வாகனங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் தந்து வரும் நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னரே ஃபிளெக்ஸ் ஃப்யூவல் அப்பாச்சி பைக்கை டிவிஎஸ் வெளியிட்டிருந்தது.

TVS Raider 125 FFT

தற்பொழுது விற்பனையில் உள்ள ரைடர் 125 பைக்கின் என்ஜினில் எந்த மாற்றங்களும் இல்லாமல் 85 % எத்தனால் கலப்பில் இயங்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட  124.8cc சிங்கிள்-சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 11.2 bhp , 6,000RPM-ல் 11.2 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மிக நேரத்தியான நிறம் மற்றும் பாடி கிராபிக்ஸ் கொண்டுள்ள ரைடர் பைக்கில் FFT (Flex Fuel Technology) பேட்ஜ் டேங்க் பகுதியில் பெரிதாக சேர்க்கப்பட்டுள்ளது. மற்றபடி, மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து

டெலஸ்கோபிக் முன் ஃபோர்க்கு மற்றும் சரிசெய்யக்கூடிய பின்புற மோனோ ஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டுள்ளது. 17-இன்ச் அலாய் வீல்கள் கொண்டுள்ள டியூப்லெஸ் டயர் உள்ளது. முன்புற டயரில் 240 மிமீ டிஸ்க் மற்றும் பின்புற டயரில் 130 மிமீ டரம் இணைக்கபட்டு கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்தை கொடுத்துள்ளது.

அனேகமாக 2025 ஆம் ஆண்டில் பரவலாக எத்தனால் கிடைக்கின்ற பகுதிகளில் முதற்கட்டமாக விற்பனைக்கு கிடைக்க துவங்கலாம்.

Exit mobile version