Automobile Tamilan

ஹார்லி-டேவிட்சன் நைட்ஸ்டர் 440 அறிமுகம் எப்பொழுது

nightster 975

ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹார்லி-டேவிட்சன் கூட்டணியில் அடுத்து நைட்ஸ்டர் 440 (Nightster 440) பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்காக பெயருக்கு காப்புரிமை கோரி பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் ரூ.2.29 லட்சம் முதல் ரூ.2.69 லட்சம் விலையில் வெளியிடப்பட்ட X440 ரெட்ரோ ஸ்டைலை கொண்ட மாடலாக அமோக வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் முன்பதிவு நடைபெற்று வருகின்றது.

Harley-Davidson Nightster 440

இந்தியாவில் ஹார்லி-டேவிட்சன் துவக்க நிலை பைக்குகளை தயாரிக்கவும், நாடு முழுவதும் உள்ள டீலர்களை செயற்படுத்தவும், மற்ற பிரீமியம் ஹார்லி பைக்குளை விற்பனை செய்யும் உரிமையை பெற்றுள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய நைட்ஸ்டர் 440 வர்த்தக முத்திரையை பதிவு செய்துள்ளது.

சர்வதேச சந்தையில் ஹார்லி-டேவிட்சன் ஸ்போர்ட்டிவான க்ரூஸர் ரக ஸ்டைலை பெற்ற நைட்ஸ்டர் 975 பைக் மாடலின் இந்திய விலை ₹ 17,49,000 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். இந்த பைக்கின் டிசைன் அம்சங்களை பெற்றதாக வரவிருக்கும், க்ருஸர் ஸ்டைல் புதிய நைட்ஸ்டர் 440 ஆனது சமீபத்தில் வெளியான எக்ஸ் 440 பைக்கில் இடம்பெற்றுள்ள  4000rpm-ல் 38 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 440சிசி ஒற்றை சிலிண்டர் லாங் ஸ்ட்ரோக் என்ஜின் அதிகபட்சமாக 6000 rpm-ல் 27 bhp பவர் வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்ற என்ஜினை கொண்டதாக நைட்ஸ்டெர் 440 வரக்கூடும்.

ஹார்லி-டேவிட்சன் நைட்ஸ்டர் 440 பைக்கின் விலை ரூ.2.70 லட்சத்துக்குள் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எக்ஸ் 440 டெலிவரி அக்டோபர் மாதம் துவங்கும் என்பதனால், அடுத்த சில மாதங்களில் நைட்ஸ்டர் 440 அறிவிப்பு வெளியாகி விற்பனைக்கு 2024 முதல் கிடைக்கலாம்.

Exit mobile version