விடா V1 Vs ஏதெர் 450X Vs ஓலா S1 Pro Vs டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒப்பீடு

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா V1 எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக உள்ள ஏதெர் 450X, டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் ஓலா S1 Pro போன்ற ஸ்கூட்டர்களுடன் பேட்டரி, வசதிகள் மற்றும் ரேஞ்சு ஆகியவற்றை ஒப்பீடு செய்து அறிந்து கொள்ளலாம்.

சமீபத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர்கள் FAME-II திட்டத்தின் கீழ் போர்டபிள் சார்ஜர் மற்றும் மென்பொருள் மேம்பாடு ஆகியவற்றுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த பணம் ₹ 288 கோடியை திரும்ப தர துவங்கியுள்ளனர்.

Vida V1 vs Ather 450X vs Ola S1 Pro vs TVS iQube

அதிக ரேஞ்சு வழங்குவதில் ஓலா நிறுவனம் தொடர்ந்து இந்த பட்டியலில் முன்னிலையில் உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக ஏதெர் 450X ஸ்கூட்டர் உள்ளது. மூன்றாவது இடத்தில் விடா V1 ஸ்கூட்டரும், இறுதியாக டிவிஎஸ் ஐக்யூப் மாடலும் உள்ளது.

மாடல்கள் வாரியாக பேட்டரி திறன், ரேஞ்சு மற்றும் விலை ஆகியவை அட்டவனையில் தொகுக்கப்பட்டுள்ளது.

Vida Specification V1 Plus V1 Pro
Battery pack 3.44 kWh 3.94 kWh
Top Speed 80 Km/h 80 Km/h
Range (IDC claimed) 143 km 165 km
Real Driving Range 85 km 95 km
Riding modes Sport, Ride, Eco Sport, Ride, Eco, Custom
Ola Specification S1 Air S1 S1 Pro
Battery pack 2, 3 & 4 kWh 2 & 3 kWh 4 kWh
Top Speed 85 km/h 90 km/h 116 km/h
Range (IDC claimed) 85 – 165 km 91 – 141 km 181 km
Real Driving Range 60 – 125 km 70 – 100 km 135 km
Riding modes Eco, Normal, Sports Eco, Normal, Sports Eco, Normal, Sports, Hyper
Ather Specification 450X 450X Pro-Packed
Battery pack 3.7 kWh 3.7 kWh
Top Speed 90 Km/h 90 Km/h
Range (IDC claimed) 146 km 146 km
Real Driving Range 100 km 105 km
Riding modes default Warp, Sport, Ride, Eco, SmartEco
iQube Specification iQube iQube S
Battery pack 3.04 kWh 3.04 kWh
Top Speed 78 km/h 78 km/h
Range (IDC claimed) 100 km 100 km
Real Driving Range 75 km 80 km
Riding modes Eco, Power Eco, Power
Chetak Specification Chetak
Battery pack 3. kWh
Top Speed 63 km/h
Range (IDC claimed) 108 km
Real Driving Range 85 km
Riding modes Eco, Power

Vida V1 Vs Ather 450X vs Ola S1 Pro vs TVS iQube Vs Chetak – விலை ஒப்பீடு

பிரபலமாக உள்ள அனைத்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களின் பட்டியல் ஆகியவற்றுடன் ஒப்பீடுகையில் ரூ.1.20 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கின்றது. அதிக ரேஞ்சு வழங்கும் மாடலாக எஸ்1 புரோ விளங்குகின்றது.

சிறப்பான செயல்திறன் மிக்க ஏதெர் 450X ஸ்கூட்டராக விளங்குகின்றது. புதிதாக வந்துள்ள விடா வி1 மாடல் இரண்டுக்கும் கடும் சவாலினை ஏற்படுத்தியுள்ளது. டிவிஎஸ் ஐக்யூப் அன்றாட பயன்பாடிற்கு ஏற்ற நல்ல மாடலாகும்.

சேட்டக் மற்ற ஸ்கூட்டர்களை விட குறைந்த ரேஞ்சு மற்றும் அதிக விலை கொண்டுள்ளது.

e-Scooter Price
Vida V1 ₹ 1,28,350 – ₹ 1,48,824
Ather 450X ₹ 1,22,189 – ₹ 1,52,539
Ola S1 Air, S1, S1 Pro ₹ 91, 854 – ₹ 1,40,599
TVS iQube ₹ 1,14,936 – ₹ 1,21,057
Bajaj Chetak ₹ 1,31,189 – ₹ 1,62,054

(கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியல்)

சென்னையில் தற்பொழுது விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. விரைவில் 10க்கு மேற்பட்ட நகரங்களில் கிடைக்க உள்ளதால் கோவை உள்ளிட்ட மற்ற முன்னணி மாநகரங்களில் விடா கிடைக்க துவங்கும்.

Exit mobile version