
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய கரீஸ்மா XMR 210 பைக்கின் முழுமையாக ஃபேரிங் செய்யப்பட்டுள்ள ஸ்போர்ட்டிவ் பெர்ஃபாமன்ஸை வெளிப்படுத்தும் மாடலின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள், நிறங்கள் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.
ஹீரோ மோட்டோகார்ப் கரீஸ்மா XMR 210 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 210cc லிக்யூடு கூல்டு என்ஜின் DOHC (Double Overhead Camshaft) அமைப்பினை பெற்று 9,250rpm-ல் 25.5 hp பவர் மற்றும் 7,250rpm-ல் 20.5 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் பொருத்தப்பட்டுள்ளது.
(ex-showroom)
ஹீரோ கரீஸ்மா XMR 210 பைக்கின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.
Karizma XMR 210 Top – ₹ 2,20,145
Karizma XMR 210 Combat – ₹ 2,22,509
(on-road price TamilNadu)
கரீஸ்மா பைக் மாடலின் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மட்டுமல்லாமல் தற்பொழுது வந்துள்ள டாப் மற்றும் காம்பேட் எடிசனில் அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனை கொண்டு 17 அங்குல வீல் பொருத்தப்பட்டிக்கின்றது. முழுமையாக ஸ்போர்ட்டிவ் எல்இடி ஹெலைட் பெற்றதாகவும், டெயில் லைட் எல்இடி ஆக அமைந்திருக்கின்றது.
பிரேக்கிங் அமைப்பில் முன்புறத்தில் 300 mm டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 230 mm டிஸ்க் பெற்று கரீஸ்மா எக்ஸ்எம்ஆர் இரட்டை சேனல் ஏபிஎஸ் பெறும் முதல் ஹீரோ பைக் ஆகும். முன்புறத்தில் 100/80-17 மற்றும் பின்புறத்தில் 140/70-17 டயர் கொண்டுள்ளது.
முதன்முறையாக, டர்ன் பை டர்ன் நேவிகேஷன் அம்சத்துடன் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை கொண்டதாக டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு ஹீரோ கனெக்டேட் 2.0 அம்சத்தை பெற்றுள்ளது. டாப் காம்பேட் வேரியண்டில் 4.2 அங்குல டிஎஃப்டி கிளஸ்ட்டரை பெற்றுள்ளது.
ஹீரோ கரீஸ்மா XMR 210 பைக்கின் பரிமாணங்கள் 2068mm நீளம், 760mm அகலம் மற்றும் 1,110mm உயரம் பெற்றதாக அமைந்துள்ளது. 1351mm வீல்பேஸ் பெற்று 160mm கிரவுண்ட் கிளியரண்ஸ் கொண்டதாக அமைந்துள்ளது. 11 லிட்டர் பெட்ரோல் கொண்ட மாடலின் எடை 163.5 கிலோ ஆகும்.
| என்ஜின் | |
| வகை | Liquid Cooled, DOHC, 4 stroke |
| Bore & Stroke | 73 mm X 50 mm |
| Displacement (cc) | 210 cc |
| Compression ratio | 12.0:1 |
| அதிகபட்ச பவர் | 25.5 PS at 9250 rpm |
| அதிகபட்ச டார்க் | 20.4 Nm at 7250 rpm |
| எரிபொருள் அமைப்பு | Fuel injection (FI) |
| டிரான்ஸ்மிஷன் & சேஸ் | |
| ஃபிரேம் | ஸ்டீல் டெர்லிஸ் ஃபிரேம் |
| டிரான்ஸ்மிஷன் | 6 ஸ்பீடு |
| கிளட்ச் | வெட் மல்டி பிளேட் |
| சஸ்பென்ஷன் | |
| முன்பக்கம் | அப்சைடு ஃபோர்க் |
| பின்பக்கம் | மோனோ ஷாக் அப்சார்பர் |
| பிரேக் | |
| முன்புறம் | 300 mm டிஸ்க் (ABS) |
| பின்புறம் | 230 mm டிஸ்க் |
| வீல் & டயர் | |
| சக்கர வகை | அலாய் |
| முன்புற டயர் | 100/80-17 ட்யூப்லெஸ் |
| பின்புற டயர் | 140/70-17 ட்யூப்லெஸ் |
| எலக்ட்ரிக்கல் | |
| பேட்டரி | 12V- 6 Ah, ETZ-7 MF |
| ஸ்டார்டர் வகை | எலக்ட்ரிக் செல்ஃப் |
| பரிமாணங்கள் | |
| நீளம் | 2060 mm |
| அகலம் | 760 mm |
| உயரம் | 1,160 mm |
| வீல்பேஸ் | 1,351 mm |
| இருக்கை உயரம் | 810 |
| கிரவுண்ட் கிளியரண்ஸ் | 160 mm |
| எரிபொருள் கொள்ளளவு | 11 litres |
| எடை (Kerb) | 163.5kg |
கரீஸ்மா எக்ஸ்எம்ஆர் பைக்கில் மஞ்சள், சிவப்பு மற்றும் கருப்பு என மூன்று நிறங்களை பெறுகின்றது.
கரீஸ்மா எக்ஸ்எம்ஆர் பைக்கிற்கு போட்டியாக யமஹா R15, சுசூகி ஜிக்ஸர் SF 250, ஜிக்ஸர் SF, பஜாஜ் பல்சர் RS 200, மற்றும் கேடிஎம் RC 200 ஆகிய மாடல்களுடன் எக்ஸ்ட்ரீம் 200S 4v மாடலும் உள்ளது.
210cc லிக்யூடு கூல்டு என்ஜின் DOHC அமைப்பினை பெற்று 9250rpm-ல் 25.5 hp பவர் மற்றும் 7,250rpm-ல் 20.5 Nm டார்க் வெளிப்படுத்தலாம். இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் பொருத்தப்பட்டுள்ளது.
ஹீரோ கரீஸ்மா XMR 210 பைக்கின் ஆன்-ரோடு விலை ரூ.2.20 லட்சம் முதல் ரூ.2.22 வரை உள்ளது.
2023 ஹீரோ கரீஸ்மா XMR மைலேஜ் 35kmpl
கரீஸ்மா XMR பைக்கின் போட்டியாளர்களான யமஹா R15, சுசூகி ஜிக்ஸர் SF 250, ஜிக்ஸர் SF, பஜாஜ் பல்சர் RS 200, மற்றும் கேடிஎம் RC 200 ஆகிய மாடல்களுடன் எக்ஸ்ட்ரீம் 200S 4v உள்ளது.
Last Updated -Price updated GST 2.0 tax structure 22/09/2025