ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 4 வால்வுகளை பெற்ற புதிய எக்ஸ்ட்ரீம் 200S 4V பைக் மாடலின் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை, நிறங்கள், தொழில்நுட்பவிபரங்கள் மற்றும் சிறப்புகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
2023 Hero Xtreme 200S 4V
மிக சிறப்பான 200 எஸ் 4வி மாடல் மூன்று புதிய நிறங்களான மஞ்சள், கருப்பு மற்றும் கிரே நிறங்களை கொண்டதாக வந்துள்ள 2023 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 எஸ் 4வி மாடல் புதிய மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப OBDII மற்றும் E20 எரிபொருளுக்கு ஏற்ற 199.6cc என்ஜின் பெற்ற எக்ஸ்ட்ரீம் 200S 4V மாடல் அதிகபட்சமாக 8500rpm-ல் 18.98 hp குதிரைத்திறன் மற்றும் 6500Rpm-ல் 17.35 Nm டார்க் திறனை கொண்டதாக விளங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கின்றது.
புதுப்பிக்கப்பட்ட இரு பிரிவுகளை கொண்ட எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட் பெற்று புதிய நிறங்கள் மற்றும் பாடி கிராபிக்ஸ் சேர்க்கப்பட்டிருக்கின்றது. முன்பாக விற்பனைக்கு வந்த 4 வால்வு எக்ஸ்பல்ஸ் பைக்கில் உள்ள என்ஜினை பெற்றுள்ளது.
இந்த எக்ஸ்ட்ரீம் 200எஸ் 4வி பைக்கில் 37 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன், 7 ஸ்டெப் முறையில் அட்ஜெஸ்ட் செய்யும் மோனோஷாக் அப்சார்பர் போன்றவற்றுடன் 17 அங்குல வீல் கொண்டு 276 mm டிஸ்க் முன்புறத்தில், 220 mm டிஸ்க் பின்புறத்தில் வழங்கப்பட்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் 100/80-17 மற்றும் 130/70-17 பின்பக்கத்தில் உள்ளது
2023 எக்ஸ்ட்ரீம் 200எஸ் 4வி பைக் மாடலின் பரிமாணங்கள் 2000 மிமீ நீளம், 745 மிமீ அகலம் மற்றும் 1106 மிமீ உயரம் கொண்டது. இதன் வீல்பேஸ் 1,344 மிமீ ஆகவும், இருக்கை உயரம் 795 மிமீ மற்றும் 165 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது.
எல்சிடி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் ப்ளூடூத் இணைப்புடன் கால், எஸ்எம்எஸ் அலர்ட், கியர் இண்டிகேட்டர், சர்வீஸ் இன்டிகேட்டர், ட்ரீப் மீட்டர், டர்ன் பை டர்ன் நேவிகேஷன் பல்வேறு அம்சங்களை கொண்டதாக வந்துள்ளது.
2023 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S 4V பைக்கின் விலை ரூ.1,45,600 (எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு)
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S 4V நுட்பவிபரங்கள்
என்ஜின் | |
வகை | ஏர் ஆயில் கூல்டு, 4 stroke |
Bore & Stroke | 66.5 mm x 57.5 mm |
Displacement (cc) | 199.6 cc |
Compression ratio | 10:01 |
அதிகபட்ச பவர் | 18.9 hp at 8500 rpm |
அதிகபட்ச டார்க் | 17.35 Nm at 6500 rpm |
எரிபொருள் அமைப்பு | Fuel injection (FI) |
டிரான்ஸ்மிஷன் & சேஸ் | |
ஃபிரேம் | டைமண்ட் ஃபிரேம் |
டிரான்ஸ்மிஷன் | 5 ஸ்பீடு |
கிளட்ச் | வெட் மல்டி பிளேட் |
சஸ்பென்ஷன் | |
முன்பக்கம் | டெலிஸ்கோபிக் ஃபோர்க் |
பின்பக்கம் | மோனோ ஷாக் அப்சார்பர் |
பிரேக் | |
முன்புறம் | டிஸ்க் 276 mm (ABS) |
பின்புறம் | டிஸ்க் 220 mm |
வீல் & டயர் | |
சக்கர வகை | அலாய் |
முன்புற டயர் | 100/80 – 17 ட்யூப்லெஸ் |
பின்புற டயர் | 130/70 – 17 ட்யூப்லெஸ் |
எலக்ட்ரிக்கல் | |
பேட்டரி | 12V 6Ah MF |
ஸ்டார்டர் வகை | எலக்ட்ரிக் செல்ஃப்/கிக் |
பரிமாணங்கள் | |
நீளம் | 2000 mm |
அகலம் | 745 mm |
உயரம் | 1106 mm |
வீல்பேஸ் | 1344 mm |
இருக்கை உயரம் | 795 mm |
கிரவுண்ட் கிளியரண்ஸ் | 165 mm |
எரிபொருள் கொள்ளளவு | 12.8 litres |
எடை (Kerb) | 155 kg |
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 எஸ் 4வி பைக் நிறங்கள்
2023 Hero Xtreme 200S 4V On-road Price in Tamil Nadu
2023 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் 4வி பைக்கின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.
Xtreme 160S 4V – ₹ 1,70,675
Hero Xtreme 200S 4V Rivals
எக்ஸ்ட்ரீம் 200S 4V மாடலை எதிர்கொள்ள பல்சர் ஆர்எஸ் 200, ஜிக்ஸர் SF, யமஹா R15 V4, R15S, ஜிக்ஸர் SF 250 மற்றும் கேடிஎம் ஆர்சி 200 ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது. செமி ஃபேரிங் செய்யப்பட்ட பல்சர் F250, பல்சர் F220, மாடல்களும் உள்ளன.
மேலும் படிக்க – எக்ஸ்ட்ரீம் 200எஸ் 4வி Vs போட்டியாளர்கள்
Faqs About Hero Xtreme 200S 4V
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் 4வி என்ஜின் விபரம் ?
எக்ஸ்ட்ரீம் 200எஸ் 4வி மாடலில் 199.6cc, Air-oil cooled 18.9 bhp at 6250 rpm மற்றும்10.4 Nm at 5000 rpm , 5 Speed Gearbox
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் 4வி vs எக்ஸ்ட்ரீம் 200எஸ் 2வி வித்தியாசம் ?
2 வால்வுகளை பெற்ற என்ஜினை விட 4 வால்வுகளை பெற்ற எக்ஸ்ட்ரீம் 200 எஸ் பைக்கில் சக்திவாய்ந்த என்ஜின் ஸ்போர்ட்டிவ் தன்மையை கொண்டுள்ளது.
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் 4வி மைலேஜ் எவ்வளவு ?
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் 4வி மைலேஜ் சுமார் 40 கிமீ வரை கிடைக்கும்,
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S 4V போட்டியாளர்கள் யார் ?
எக்ஸ்ட்ரீம் 200S 4V மாடலை எதிர்கொள்ள பல்சர் ஆர்எஸ் 200, ஜிக்ஸர் SF, யமஹா R15 V4, R15S, ஜிக்ஸர் SF 250 மற்றும் கேடிஎம் ஆர்சி 200 ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S 4V ஆன்-ரோடு விலை எவ்வளவு ?
ஹீரோ மோட்டோகார்ப் எக்ஸ்ட்ரீம் 200S 4V பைக்கின் ஆன்-ரோடு விலை ₹ 1,70,675 ஆகும்.