பட்ஜெட் விலையில் கிடைக்கின்ற ஃபேரிங் ஸ்டைல் பெற்ற ஸ்போர்ட்டிவ் மாடலான ஹீரோ மோட்டோகார்ப் எக்ஸ்ட்ரீம் 200S 4V மாடலை எதிர்கொள்ள பல்சர் ஆர்எஸ் 200, ஜிக்ஸர் SF, யமஹா R15 V4, R15S, ஜிக்ஸர் SF 250 மற்றும் கேடிஎம் ஆர்சி 200 ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.
செமி ஃபேரிங் செய்யப்பட்ட பல்சர் F250, பல்சர் F220, மாடல்களும் உள்ளன. ஃபேரிங் ஸ்டைல் பெற்ற யமஹா ஆர்15 பைக் லிக்யூடு கூல்டு என்ஜின் பெற்று மிகவும் பிரீமியம் வசதிகளை கொண்ட ஸ்போர்ட்டிவ் மாடலாக விளங்குகின்றது. 200சிசி பிரிவில் குறைந்த விலை கொண்டதாக எக்ஸ்ட்ரீம் 200எஸ் விளங்குகின்றது.
Hero Xtreme 200S 4V vs Rivals Price comparison
OBDII மற்றும் E20 எரிபொருளுக்கு ஏற்ற 199.6cc என்ஜின் பெற்ற எக்ஸ்ட்ரீம் 200S 4V மாடல் அதிகபட்சமாக 8500rpm-ல் 18.98 hp குதிரைத்திறன் மற்றும் 6500Rpm-ல் 17.35 Nm டார்க் திறனை கொண்டதாக விளங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கின்றது.
மூன்று புதிய நிறங்களை பெற்றுள்ள மாடலில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் வழங்கப்பட்டு, புதிய ஹேண்டில் பார் கொடுக்கப்பட்டு, இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் ஆனது வழங்கப்பட்டுள்ளது.
இங்கே R15 மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தக்கூடிய மாடல், இருந்தாலும் ஃபேரிங் வகையில் உள்ளதால் ஒப்பீடப்பட்டுள்ளது. மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தும் மற்றொரு மாடல் RC 200 ஆகும்.
தயாரிப்பாளர் | என்ஜின் பவர், டார்க் |
Hero Xtreme 200S 4V | 199.6cc, Air-oil cooled 18.9 bhp at 6250 rpm
10.4 Nm at 5000 rpm , 5 Speed Gearbox |
Bajaj Pulsar RS200 | 199.5cc, Liquid-cooled 24.5 bhp at 9750 rpm
18.7 Nm at 8000 rpm, 6 Speed Gearbox |
Suzuki Gixxer SF | 155cc, Air cooled 13.5 bhp at 8000 rpm
13.8 Nm at 6000 rpm, 5 Speed Gearbox |
Yamaha R15V4/R15S/R15M | 155cc, Liquid-cooled 18.4 bhp at 10000 rpm
14.2 Nm at 7500 rpm, 6 Speed Gearbox |
KTM RC 200 | 199.5cc, liquid cooled 24.6 bhp at 10000 rpm
19.2 Nm at 8000 rpm, 6 Speed Gearbox |
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S 4V பைக்கின் விலை ஒப்பீடு செய்தல் அட்டவனையில் காணலாம். (தமிழ்நாடு விலை பட்டியல்) வழங்கப்பட்டுள்ள ஆன்-ரோடு விலை தோராயமானது, இதில் கூடுதல் ஆக்செரீஸ், டீலர்களை பொறுத்து விலை மாறுபடும்.
தயாரிப்பாளர் | விலை (எக்ஸ்-ஷோரூம்) | ஆன்-ரோடு விலை |
Hero Xtreme 200S 4V | ₹ 1,45,600 | ₹ 1,70,675 |
Bajaj Pulsar RS200 | ₹ 1,72,550 | ₹ 2,04,789 |
Suzuki Gixxer SF | ₹ 1,41,337 – ₹ 1,50,135 | ₹ 1,66,456 – ₹ 1,77,670 |
Yamaha R15 Series | ₹ 1.65,939,– ₹ 1,96,739 | ₹ 1,99,560 – ₹ 2,33,705 |
KTM RC200 | ₹ 2,14,688- ₹ 2,17,824 | ₹ 2,45,018- ₹ 2,57,024 |