Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஹீரோ மேவ்ரிக் 440 விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

by MR.Durai
6 April 2024, 8:27 am
in Hero Motocorp
0
ShareTweetSend

ஹீரோ மேவ்ரிக் 440

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன புதிய மேவ்ரிக் 440 (Hero Mavrick 440) பைக்கின் விலை ரூபாய் 1.99 லட்சம் முதல் ரூபாய் 2.24 லட்சம் வரை அமைந்துள்ளது. மேவரிக் 440 மாடலின் நிறங்கள், மைலேஜ், எஞ்சின் விபரம் உட்பட அனைத்து முக்கிய அம்சங்களையும் முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

ஹீரோ மேவ்ரிக் 440

350சிசி முதல் 500சிசி வரையில் இடைப்பட்ட பைக்குகளுக்கு கடும் சவாலினை ஏற்படுத்தும் வகையில் வந்துள்ள மேவ்ரிக் 440 பைக் ஆனது 440cc என்ஜினை பெறுகின்றது. இந்த எஞ்சின் ஏற்கனவே விற்பனைக்கு வந்த ஹார்லி டேவிட்சன் X440 பைக்கில் இடம் பெற்றதாகும்.

ஹார்லி டேவிட்சன் மற்றும் ஹீரோ மோட்டோ கார் கூட்டணியில் தயாரிக்கப்பட்டுள்ள இரண்டாவது மாடலானது மிக நேர்த்தியான  நவீனத்துவமான ரோட்ஸ்டெர் அமைப்பினை பெறுகின்ற பைக்கில் வட்ட வடிவ எல்ஈடி ஹெட் லைட் ஆனது கொடுக்கப்பட்டு நெகட்டிவ் எல்சிடி டிஜிட்டல் கிளஸ்டர் மற்றும் நேர்த்தியான 5 விதமான வண்ணங்கள் 3 விதமான வேரியண்டுகள் என கவர்ச்சிகரமாக அமைந்திருக்கின்றது.

மேவ்ரிக் 440 எஞ்சின் விபரம்:  440cc ஏர் ஆயில் கூல்டு ஒற்றை சிலிண்டர் Torq-X என்ஜின் அதிகபட்சமாக 6000 RPM-ல் 27 bhp பவர் மற்றும் 4000rpm-ல் 36Nm டார்க்கை உற்பத்தி செய்கின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் அசிஸ்ட் மற்றும் சிலிப்பர் கிளட்ச் உள்ளது.

சஸ்பென்ஷன் மற்றும் சேஸ்: மேவரிக் 440 பைக்கில் முன்புறத்தில்  டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர் உள்ளது. 110/70 – 17 மற்றும் பின்புறத்தில் 150/60 – 17 டயர் கொண்டுள்ளது. டிஸ்க் பிரேக் 320mm மற்றும் பின்புறத்தில் 240mm டிஸ்க் பிரேக் கொண்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றுள்ளது.

ஹீரோ மேவ்ரிக் 440

மூன்று வேரியண்ட்:

  • துவக்கநிலை பேஸ் வேரியண்ட் ஒற்றை ஆர்டிக் வெள்ளை நிறத்தை பெற்று ஸ்போக்டூ வீல் ட்யூப் டயர் கொண்டு சாதாரண கிளஸ்ட்டரை மட்டும் பெறுகின்றது.
  • நடுத்தர மிட் வேரியண்ட் மாடலில் ட்யூப்லெஸ் டயர், அலாய் வீல் பெற்று ஃபியர்லெஸ் சிவப்பு, நீலம் என இரு நிறங்கள் வந்துள்ளது.
  • அடுத்து டாப் வேரியண்டில் டைமண்ட் கட் அலாய் வீல், மெசின் ஃபினிஷ்டு என்ஜின் பாகங்கள், ஹீரோ கனெக்ட் மூலம்  டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன்,  ஜியோ-பென்ஸ்,  மொபைல் விபரம், அழைப்புகளை ஏற்க அல்லது நிராகரிக்க என 35க்கு மேற்பட்ட கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் பெற்று பேன்டம் பிளாக் மற்றும் என்கிமா பிளாக் என இரு நிறங்களை கொண்டுள்ளது.

2024 ஹீரோ மேவ்ரிக் 440 நுட்பவிபர அட்டவணை

ஹீரோ மேவ்ரிக் 440 Base/Mid/Top
எஞ்சின் மற்றும் டிரான்ஸ்மிஷன்
எஞ்சின் வகை சிங்கிள் சிலிண்டர், 4-ஸ்ட்ரோக், 2V SOHC, FI
Bore & Stroke 79.6X88.4 mm
இடப்பெயர்ச்சி (cc) 440 cc
Compression ratio 9.65:1
குளிரூட்டும் முறை ஏர்-ஆயில்
அதிகபட்ச சக்தி 27 bhp @ 6,000 rpm
அதிகபட்ச டார்க் 36 Nm @ 4,000 rpm
டிரான்ஸ்மிஷன் வகை  6 ஸ்பீடு சிலிப்பர் மற்றும் அசிஸ்ட்
சேஸிஸ் மற்றும் சஸ்பென்ஷன்
சேஸிஸ் வகை ட்ரெல்லிஸ் ஃபிரேம்
முன் சஸ்பென்ஷன் டெலிஸ்கோபிக் ஃபோர்க், 43 மிமீ
பின் சஸ்பென்ஷன் 7 படிநிலை ட்வீன் ஷாக் அப்சார்பர்
முன் பிரேக் டிஸ்க்  320 மிமீ
பின் பிரேக் டிஸ்க்  240 மிமீ
பிரேக்கிங் முறை டூயல் சேனல் ஏபிஎஸ்
வீல் & டயர்
சக்கர வகை ஸ்போக்/அலாய்
முன்புற டயர் 110/70 – 17
பின்புற டயர் 150/60 – 17
பரிமாணங்கள் மற்றும் எடை
நீளம் 2,100 மிமீ
அகலம் 868 மிமீ
உயரம் 1,112 மிமீ
வீல்பேஸ் 1,388 மிமீ
இருக்கை உயரம் 803 மிமீ
கிரவுண்ட் கிளியரண்ஸ் 175 மிமீ
எரிபொருள் கொள்ளளவு 13.5 லிட்டர்
எடை (Kerb) 187 கிலோ
செயல்திறன் மற்றும் மைலேஜ்
அதிகபட்ச வேகம் 150 kmph
மைலேஜ் 36 kmpl
பிற அம்சங்கள்
பேட்டரி 12V 8.0Ah
ஸ்டார்டர் வகை எலக்ட்ரிக் செல்ஃப்
கருவிகள் மற்றும் முக்கிய அம்சங்கள் எல்சிடி கிளஸ்ட்டர் பெற்று ஹீரோ கனெக்ட்

மூலம் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் உட்பட 35 வசதிகள் உள்ளன

விலை (எக்ஸ்ஷோரூம்) Base – ₹ 1,99,000 Mid – ₹ 2,14,000 Top ₹ 2,24,000

 

ஹீரோ மேவ்ரிக் 440 வண்ணங்கள்

பேஸ் மாடலில் ஆர்டிக் வெள்ளை, மிட் மாடலில் ஃபியர்லெஸ் ரெட், ப்ளூ இறுதியாக Maverick 440 டாப் வேரியண்டில் பேன்டம் பிளாக் மற்றும் என்கிமா பிளாக் என ஒட்டுமொத்தமாக 5 நிறங்களை பெறுகின்றது.

hero mavrick colours

ஹீரோ மேவ்ரிக் 440 ஆன் ரோடு விலை

மேவ்ரிக் 440 பைக்கின் முழுமையான ஆன் ரோடு விலை பட்டியல் அட்டவணை பின்வருமாறு-

Hero Mavrick 440 விலை (எக்ஸ்-ஷோரூம்) ஆன்-ரோடு விலை
Mavrick Base ₹ 1,99,000 ₹ 2,39,789
Mid ₹ 2,14,000 ₹ 2,56,878
Top ₹ 2,24,000 ₹ 2,69,721

(Hero Mavrick 440 on-road price Tamil Nadu)

குறிப்பிடப்பட்டுள்ள விலை சென்னை உட்பட அனைத்து தமிழ்நாட்டின் நகரங்களுக்கும் பொருந்தும் கூடுதலாக ஆக்செரீஸ் சேர்க்கப்படும் பொழுது விலை மாறுபடக்கூடும்.

Hero Mavrick Rivals

ஹீரோ மேவ்ரிக் 440 பைக்கிற்கு போட்டியாக டிரையம்ப் ஸ்பீடு 440, ஸ்கிராம்பளர் 400 X, கிளாசிக் 350, ஹோண்டா CB 350, ஜாவா 350 உள்ளிட்ட மாடல்கள் இடம்பெற்றுள்ளன.

ஹீரோ மேவ்ரிக் பற்றிய FAQs:

ஹீரோ மேவ்ரிக் 440 எஞ்சின் திறன் என்ன?

ஹீரோ மேவ்ரிக் 440cc ஏர்-ஆயில் கூல்டு சிங்கிள் சிலிண்டர், 4-ஸ்ட்ரோக், SOHC, 2-வால்வு எஞ்சின் கொண்டுள்ளது, இது 27 bhp சக்தி @ 6,000 rpm மற்றும் 36 Nm முறுக்கு @ 4000 rpmல் உற்பத்தி செய்கிறது.

ஹீரோ மேவ்ரிக் 440 மைலேஜ் என்ன?

ஹீரோ மேவ்ரிக் 440 எரிபொருள் சிக்கனம் அல்லது மைலேஜ் லிட்டருக்கு 30-32 கிமீ கிடைக்கலாம்,

ஹீரோ மேவ்ரிக் 440 பைக்கின் ஆன்-ரோடு விலை ?

ஹீரோ மேவ்ரிக் 440 பைக்கின் ஆன்-ரோடு விலை ரூ. 2.39 லட்சம் முதல் ரூ. 2.68 லட்சம் வரை கிடைக்கின்றது. (தமிழ்நாட்டிற்கு பொருந்தும்)

Hero Mavrick 440 பைக்கின் போட்டியாளர்கள் யார் ?

டிரையம்ப் ஸ்பீடு 400, ராயல் என்ஃபீல்டு 350சிசி பைக்குகள் மற்றும் ஹோண்டா சிபி 350 ஆர்எஸ் ஆகியவற்றை Hero Mavrick 440 எதிர்கொள்ளுகின்றது.

Related Motor News

2025 ஹோண்டா CB350 ஹைனெஸ் விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்

அட்வென்ச்சர் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 பற்றி முக்கிய சிறப்புகள்

ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 440 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ராயல் என்ஃபீல்டு Goan கிளாசிக் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்

புதிய ராயல் என்ஃபீல்டின் ஸ்கிராம் 440 வெளியானது..!

ஸ்போர்ட்டிவான ஹீரோ கரீஸ்மா XMR 250 அறிமுகமானது

மேவரிக் 440ல் எத்தனை வேரியண்ட் உள்ளது ?

மேவரிக் 440 பைக்கில் பேஸ், மிட் மற்றும் டாப் என என மூன்று வேரியண்டுகளில் 5 விதமான நிறங்கள் ஸ்போக் வீல் மற்றும் அலாய் வீல் பெற்றுள்ளது.

ஹீரோ மேவ்ரிக் 440 புகைப்படங்கள்

hero mavrick 440
hero mavrick 440 spoke wheel
hero mavrick 440 bike first look
ஹீரோ மேவ்ரிக் 440
hero mavrick colours
hero mavrick 440 tank logo
hero mavrick 440 with accessories
hero mavrick 440 blue
hero mavrick 440
ஹீரோ நிறுவன முதல் 350-500cc பிரிவில் மோட்டார்சைக்கிள் மேவ்ரிக் 440 அறிமுக சலுகையாக விற்பனைக்கு ரூ.1.99 லட்சம் முதல் ரூ.2.24 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மிக சிறப்பான ஸ்டைலிங் அம்சங்களை பெற்றுள்ள ரோட்ஸ்டெர் மிக கடுமையான சவாலினை நடுத்தர மோட்டார்சைக்கிளின் வலுவான போட்டியாளர்களை எதிர்கொள்ளுகின்றது.
ஹீரோ மேவ்ரிக் 440
hero-mavrick-tft-instrument-cluster
Tags: 350cc-500cc bikesHero BikeHero Mavrick 440
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2025 hero xpulse 210 first look

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ஹீரோ டெஸ்டினி 125 ஆன் ரோடு

ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ஹீரோ ஜூம் 160 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ஹீரோ ஜூம் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

2025 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R விலை, மைலேஜ், படங்கள் மற்றும் சிறப்புகள்

ஹீரோ கரீஸ்மா XMR 210 பைக்கின் விலை, மைலேஜ், படங்கள் மற்றும் சிறப்புகள்

2025 ஹீரோ கிளாமர் 125 பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

2025 ஹீரோ டெஸ்டினி பிரைம் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

2023 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S 4V பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

அடுத்த செய்திகள்

vinfast vf7 car

தூத்துக்குடியில் தயாராகும் வின்ஃபாஸ்ட் கார்களுக்கு முன்பதிவு துவங்கியது

kinetic dx electric scooter

ஜூலை 17 ., கைனடிக் DX எலக்ட்ரிக் ஸ்கூட்டராக அறிமுகம்.!

kia carens clavis ev price

ரூ.17.99 லட்சத்தில் கியா காரன்ஸ் கிளாவிஸ் இவி விற்பனைக்கு வெளியானது

டெஸ்லா மாடல் Y விலைப்படியல்

ரூ.59.89 லட்சம் விலையில் டெஸ்லா மாடல் Y விற்பனைக்கு வெளியானது

சிஎன்ஜி ஹூண்டாய் ஆரா செடானில் E வேரியண்ட் அறிமுகம்

ரூ.8.08 லட்சத்தில் ஹூண்டாய் ஆரா S AMT வேரியண்ட் வெளியானது

yamaha fz-x hybrid

ரூ.1.52 லட்சத்தில் FZ-X மைல்டு ஹைபிரிட் ஆப்ஷனை வெளியிட்ட யமஹா

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan