Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஹீரோ ஜூம் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

by MR.Durai
24 January 2025, 3:11 pm
in Hero Motocorp
0
ShareTweetSendShare

hero xoom 125 on road price

இந்தியாவின் மிகவும் வேகமான 125சிசி ஸ்கூட்டர் மாடலாக விளங்கும் ஹீரோ ஜூம் 125 ஸ்கூட்டரின் விலை, மைலேஜ், நுட்ப விபரங்கள், நிறங்கள் மற்றும் சிறப்பம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

2025 Hero Xoom 125

125சிசி சந்தையில் ஹீரோ நிறுவனம் ஸ்போர்ட்டிவான புதிய மாடலை பல்வேறு நவீன அம்சங்களுடன் மாறுபட்ட ஸ்டைலிஷான புதிய ஜூம் பிராண்டின் கீழ் கிடைக்கின்ற 125சிசி என்ஜின் கொண்டு போட்டியாளர்களை விட பிரீமியம் வசதிகளுடன் ஜூம் 125 விளங்குகின்றது.

ஜூம் ஸ்கூட்டரில் 125சிசி எஞ்சின் புதிய மாசு விதிகளுக்கு இணக்கமான ஏர்-கூல்டு, 124.6cc என்ஜின் பொருத்தப்பட்டு 7,250rpm-ல் அதிகபட்சமாக 9.79 bhp பவர் மற்றும் 6,000rpm-ல் 10.4 NM டார்க் வழங்குகின்றது. இதில் தொடர்ந்து சிவிடி கியர்பாக்ஸ் பயன்படுத்தப்படுகின்றது.

அன்டர் போன் ஃபிரேம் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள ஜூம் 125 ஸ்கூட்டரில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் அட்ஜெஸ்டர் உடன் கூடிய ஒற்றை பக்க சிங்கிள் ஷாக் சஸ்பென்ஷனை பெற்ற இந்த ஸ்கூட்டரின் பரிமாணங்கள் நீளம் 1978மிமீ, அகலம் 749மிமீ மற்றும் உயரம் 1131 மிமீ கொண்டுள்ளது. இதன் வீல்பேஸ் 1327 மிமீ பெற்று 164மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்றதாக உள்ளது. 125சிசி பிரிவில் கூடுதல் வீல்பேஸ் மற்றும் அதிக கிரவுண்ட கிளியரண்ஸ் கொண்டதாக விளங்குகின்றது.

இந்த மாடலின் இருக்கைக்கான நீளம் 777 மிமீ மற்றும் 5 லிட்டர் எரிபொருள் கொள்ளளவு பெற்று, 121 கிலோ எடை கொண்டு முன்பக்கத்தில் 130 மிமீ டிரம் அல்லது 190 மிமீ டிஸ்க் பிரேக்குடன் மற்றும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் பெற்றுள்ளது. இந்த ஸ்கூட்டரிலும் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்தை கொண்டு 14 அங்குல வீல் பெற்றுள்ளது. டீயூப்லெஸ் டயர் பொருத்தப்பட்டு முன்புறத்தில் 110/80 – 14 மற்றும் பின்புறத்தில் 120/70 – 14 டயர் உள்ளது.

குறிப்பாக இந்த பிரிவில் 14 அங்குல வீல், முழுமையான எல்இடி லைட்டிங், எல்இடி சிக்யூன்சல் லைட்டிங், ஒளிரும் வகையிலான ஸ்டார்டிங் சுவிட்ச் ஆகியவற்றுடன் பூட் விளக்கு உள்ளது.

2025 ஹீரோ ஜூம் 125 மாடலின் ப்ளூடூத் வாயிலாக இணைக்கும் பொழுது நேவிகேஷன், அழைப்பு, எஸ்எம்ஸ் சார்ந்த அறிவிப்புகள கிடைக்கின்றது. கூடுதலாக யூஎஸ்பி Type-C சார்ஜிங் போர்டு வழங்கப்பட்டுள்ளது.

  • Xoom 125 VX Rs.90,900
  • Xoom 125 ZX Rs.99,300

(Ex-showroom)

hero xoom 125 front

2025 Hero Xoom 125 on-Road Price Tamil Nadu

ஹீரோ மோட்டோகார்ப் ஜூம் 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர், புதுக்கோட்டை, விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, தரும்புரி, நாகர்கோவில் என மற்ற மாவட்டங்களுக்கும் புதுச்சேரி மாநிலத்துக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து கூடுதல் ஆக்செரீஸ் சேர்க்கப்படும் பொழுது மாறுபடும்.

  • Xoom 125 VX Rs.1,08,654
  • Xoom 125 ZX Rs.1,18,957

(on-road Price in Tamil Nadu)

  • Xoom 125 VX – Rs.99,631
  • Xoom 125 ZX  – Rs.1,06,765

(on-road Price in Pondicherry)

ஹீரோ ஜூம் 125 நுட்பவிரங்கள்

என்ஜின்
வகை ஏர் கூல்டு, 4 stroke
Bore & Stroke 52.4 x 57.8 mm
Displacement (cc) 124.6 cc
Compression ratio 10.0:1
அதிகபட்ச பவர் 9.8 hp (7.3 Kw) at 7,250 rpm
அதிகபட்ச டார்க் 10.4Nm @ 6,000rpm
எரிபொருள் அமைப்பு Fuel injection (FI)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் அண்டர் போன்
டிரான்ஸ்மிஷன் ஆட்டோமேட்டிக்
கிளட்ச் டிரை டைப்
சஸ்பென்ஷன்
முன்பக்கம் டெலிஸ்கோபிக்
பின்பக்கம் அட்ஜெஸ்டபிள் சிங்கிள் சஸ்பென்ஷன்
பிரேக்
முன்புறம் டிரம் 130 mm/ டிஸ்க் 190மிமீ
பின்புறம் டிரம் 130 mm (with CBS)
வீல் & டயர்
சக்கர வகை அலாய்
முன்புற டயர் 110/80 – 14 ட்யூப்லெஸ்
பின்புற டயர் 120/70 – 14  ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
பேட்டரி 12V- 4Ah /ETZ-5 MF பேட்டரி
ஸ்டார்டர் வகை எலக்ட்ரிக் செல்ஃப்/கிக்
பரிமாணங்கள்
நீளம் 1978 mm
அகலம் 749 mm
உயரம் 1131 mm
வீல்பேஸ் 1327 mm
இருக்கை உயரம் 777 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 164 mm
எரிபொருள் கொள்ளளவு 5 litres
எடை (Kerb) 120 kg (drum) – 121 kg (Disc)

ஹீரோவின் ஜூம் 125 நிறங்கள்

சிவப்பு, கிரே, ப்ளூ, மற்றும் லைம் என 4 விதமான நிறங்களை மட்டும் கொண்டதாக ஜூம் 125 கிடைக்கின்றது.

hero xoom 125 red
hero xoom 125 scooter lime yellow
hero xoom 125 scooter grey
hero xoom 125 scooter blue

2025 Hero Xoom rivals

2025 ஹீரோவின் ஜூம் 125சிசி ஸ்கூட்டருக்கு போட்டியாக டியோ 125, அவெனிஸ் 125, டிவிஎஸ் என்டார்க் 125 உட்பட ஏப்ரிலியா SR125  தவிர ஆக்டிவா 125, ஆக்செஸ் 125 ஜூபிடர் 125, டெஸ்டினி 125 உட்பட பல மாடல்களை எதிர்கொள்ளுகின்றது.

Faqs About Hero xoom 125

ஹீரோ ஜூம் 125 என்ஜின் விபரம் ?

124.6cc என்ஜின் பொருத்தப்பட்டு 7,250rpm-ல் அதிகபட்சமாக 9.79 bhp பவர் மற்றும் 6,000rpm-ல் 10.4 NM டார்க் கொண்டு சிவிடி கியர்பாக்ஸ் பயன்படுத்தப்படுகின்றது.

ஹீரோ ஜூம் 125 மைலேஜ் எவ்வளவு ?

ஹீரோ ஜூம் 125 மைலேஜ் லிட்டருக்கு 40-42 கிமீ வரை வழங்கும்.

ஹீரோ ஜூம் 125 ஆன்-ரோடு விலை எவ்வளவு ?

ஹீரோ ஜூம் 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை ரூ.1.09 லட்சம் முதல் ரூ.1.19 லட்சம் வரை அமைந்துள்ளது.

ஜூம் 125 வேரியண்ட் விபரம் ?

ZX என்ற டாப் வேரியண்டில் டிஸ்க் பிரேக், கனெக்ட்டிவிட்டி வசதிகள் உட்பட எல்இடி சிக்யூன்சல் விளக்கு, பூட் லைட் உள்ளது. குறைந்த விலை VX மாடலில் டிரம் பிரேக் உள்ளது.

2024 ஜூம் 125 போட்டியாளர்கள் ?

டியோ 125, அவெனிஸ் 125, டிவிஎஸ் என்டார்க் 125 உட்பட ஏப்ரிலியா SR125 தவிர மற்ற 125சிசி ஸ்கூட்டர்களும் உள்ளன.

Related Motor News

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

இந்தியாவில் 2025 டிரையம்ப் Trident 660 விற்பனைக்கு வெளியானது

2027 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ தேதி வெளியானது

மஹிந்திரா BE 6, XEV 9e கார்களில் பேக் டூ வேரியண்டில் 79kWh பேட்டரி வெளியானது

2025 Hero xoom 125 Scooter Image Gallery

hero xoom 125 scooter
hero xoom 125 front
hero xoom 125 zx colours
Hero Xoom 125R rear
Hero Xoom 125R Rear view
hero xoom 125
Hero Xoom 125R Cluster
Hero Xoom 125R Side view
hero xoom 125 red
hero xoom 125 scooter lime yellow
hero xoom 125 scooter grey
hero xoom 125 scooter blue
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2025 hero xpulse 210 first look

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ஹீரோ டெஸ்டினி 125 ஆன் ரோடு

ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ஹீரோ ஜூம் 160 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

2025 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R விலை, மைலேஜ், படங்கள் மற்றும் சிறப்புகள்

ஹீரோ மேவ்ரிக் 440 விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

ஹீரோ கரீஸ்மா XMR 210 பைக்கின் விலை, மைலேஜ், படங்கள் மற்றும் சிறப்புகள்

2025 ஹீரோ கிளாமர் 125 பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

2025 ஹீரோ டெஸ்டினி பிரைம் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

2023 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S 4V பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

அடுத்த செய்திகள்

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

renault triber 2025 facelift spied

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

2025-triumph-trident-660-launched

இந்தியாவில் 2025 டிரையம்ப் Trident 660 விற்பனைக்கு வெளியானது

yamaha fz-x chrome

2027 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ தேதி வெளியானது

XEV 9e எலக்ட்ரிக் எஸ்யூவி ஆன்-ரோடு விலை

மஹிந்திரா BE 6, XEV 9e கார்களில் பேக் டூ வேரியண்டில் 79kWh பேட்டரி வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan