நடப்பு ஜூலை மாதம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஃபேரிங் ஸ்டைல் பெற்ற பட்ஜெட் விலை எக்ஸ்ட்ரீம் 200S 4V விற்பனைக்கு வெளியாக உள்ளது. 4 வால்வுகளை பெற்ற புதிய என்ஜின் பெற்றதாக அறிமுகம் செய்யப்படலாம்.
ஏற்கனவே, முதன்முறையாக எக்ஸ்ட்ரீம் 200S 4V பைக்கின் படத்தை நாம் வெளியிட்டிருந்தோம். பேஷன் பிளஸ் 110 மற்றும் எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி ஆகியவற்றை தொடர்ந்து வரவுள்ளது.
Hero Xtreme 200S 4V
புதிய OBDII+E20 எரிபொருளுக்கு ஏற்ற 199.6cc என்ஜின் பெற்ற அதிகபட்சமாக 8500rpm-ல் 18.98 hp குதிரைத்திறன் மற்றும் 6500Rpm-ல் 17.35 Nm டார்க் திறனை கொண்டதாக விளங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கின்றது.
புதுப்பிக்கப்பட்ட எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட் பெற்று புதிய நிறங்கள் மற்றும் பாடி கிராபிக்ஸ் சேர்க்கப்பட்டிருக்கின்றது. முன்பாக விற்பனைக்கு வந்த 4 வால்வு எக்ஸ்பல்ஸ் பைக்கில் உள்ள என்ஜினை பெற்றுள்ளது.
இந்த எக்ஸ்ட்ரீம் 200எஸ் 4வி பைக்கில் 37 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன், 7 ஸ்டெப் முறையில் அட்ஜெஸ்ட் செய்யும் மோனோஷாக் அப்சார்பர் போன்றவற்றுடன் 17 அங்குல வீல் கொண்டு 276 mm டிஸ்க் முன்புறத்தில், 220 mm டிஸ்க் பின்புறத்தில் வழங்கப்பட்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.
அடுத்த, சில வாரங்களுக்குள் எக்ஸ்ட்ரீம் 200s 4வி பைக் விற்பனைக்கு வெளியாக உள்ளது.