Home Car News

ரூ.22.30 லட்சத்தில் ஹூண்டாய் டூஸான் விற்பனைக்கு அறிமுகமானது

  • ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை ரூ.22.30 லட்சம்
  • கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் 8.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
  • இரண்டு என்ஜினிலும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது.

மேம்பட்ட புதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி மாடல் டிசைன் மற்றும் வசதிகளை கூடுதலாக பெற்று பிஎஸ்-6 ஆதரவை பெற்ற பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினுடன் ரூ.22.30 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.27.03 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் முதன்முறையாக ஆட்டோ எக்ஸ்போ 2020 கண்காட்சியில் வெளியான டூஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இப்போது விற்பனைக்கு வெளியிடப்பட்டு விரைவில் விநியோகம் செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. முந்தைய மாடலை விட ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பெரிய அளவிலான கேஸ்கேடிங் கிரில், திருத்தம் செய்யப்பட்ட பம்பர்கள், முழு எல்இடி ஹெட்லைட், புதிய அலாய் வீல் வடிவமைப்பு மற்றும் புதுப்பிக்கப்பட்ட டெயில் விளக்கை ஆகியவைற்றை கொண்டுள்ளது.

புதிய ஹூண்டாய் டூஸானில் மேம்பட்ட டாஷ்போர்டு சென்டரல் கன்சோலில் 8.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ப்ளூலிங்க் கனெக்ட்டிவிட்டி அம்சத்தை கொண்டுள்ளது. பனோரமிக் சன்ரூஃப், 8 முறைகளில் எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான ஓட்டுநர் இருக்கை, வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங் போன்றவை பெற்றுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் பிஎஸ் 6 மாசு உமிழ்வுடன் வந்துள்ள இந்த காரில் 150 ஹெச்பி பவர்  192 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர்  பெட்ரோல் என்ஜின் கொண்டுள்ளது. இந்த மாடலில் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

182 ஹெச்பி பவர், 400 என்எம் டார்க் வழங்கும் 2.0 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் கொண்டுள்ளது. இந்த மாடலில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. டீசல் மாடலில் ஆல் வீல் டிரைவ் வேரியண்டை GLS மாடலில் மட்டும் கிடைக்கின்றது.

ஜீப் காம்பஸ், ஹோண்டா சிஆர்-வி, ஸ்கோடா கரோக் போன்ற மாடல்களுடன் ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி போட்டியிடுகின்றது.

2020 Hyundai Tucson Price

Tucson GL(O) Petrol – ரூ. 22.30 லட்சம்

Tucson GLS Petrol – ரூ. 23.52 லட்சம்

Tucson GL(O) Diesel – ரூ. 24.35 லட்சம்

Tucson GLS Diesel – ரூ. 25.56 லட்சம்

Tucson GLS 4WD Diesel – ரூ. 27.03 லட்சம்

(எக்ஸ்ஷோரும் இந்தியா)

Exit mobile version