ஆட்டோ எக்ஸ்போ 2020: புதிய ஹூண்டாய் டூஸான் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது

0

hyundai tucson suv

2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தபட்டுள்ள புதிய ஹூண்டாய் டூஸான் காரில் தோற்ற அமைப்பு உட்பட இன்டிரியரிலும் பெரிய அளவில் மாற்றங்களை பெற்றுள்ளது. கனெக்ட்டிவிட்டி சார்ந்த ப்ளூலிங்க் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்றுள்ளது.

Google News

டூஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பெரிய அளவிலான கேஸ்கேடிங் கிரில், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர்கள், முழு எல்இடி ஹெட்லைட், புதிய அலாய் வீல் வடிவமைப்பு மற்றும் புதுப்பிக்கப்பட்ட டெயில் விளக்கை ஆகியவைற்றை கொண்டுள்ளது.

உட்புறத்திற்கான மாற்றங்கள் மிக பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட டாஷ்போர்டு சென்டரல் கன்சோலுடன் 8.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ப்ளூலிங்க் கனெக்ட்டிவிட்டி அம்சத்தை கொண்டுள்ளது. பனோரமிக் சன்ரூஃப், 8 முறைகளில் எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான ஓட்டுநர் இருக்கை, வயர்லெஸ் சார்ஜர் போன்றவை பெற்றுள்ளது.

ஹூண்டாய் டூஸான் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் பிஎஸ் 6 மாசு உமிழ்வுடன் விற்பனைக்கு வரவுள்ளது. 150 ஹெச்பி பவர்  192 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர்  பெட்ரோல் என்ஜின் கொண்டுள்ளது. இந்த மாடலில் டார்க் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட உள்ளது.

182 ஹெச்பி பவர், 400 என்எம் டார்க் வழங்கும் 2.0 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் கொண்டுள்ளது. இந்த மாடலில் டார்க் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் 8 வேக மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட உள்ளது. டீசல் மாடலில் ஆல் வீல் டிரைவ் வேரியண்டை GLS மாடலில் மட்டும் கிடைக்கின்றது.

இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கின்ற ஜீப் காம்பஸ், ஹோண்டா சிஆர்-வி போன்ற மாடல்களுடன் ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி சந்தையை பகிர்ந்து கொள்கின்றது.