ரூ. 9,76 லட்சத்தில் கியா சொனெட் HTK+ 1.2 பெட்ரோலில் சன்ரூஃப் அறிமுகம்

ஆரம்ப நிலை HTK+ 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பெற்ற கியா சொனெட் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட வேரியண்ட் சன்ரூஃப் வசதி கொண்டதாக விற்பனைக்கு ரூ. 9,76 லட்சத்தில் அறிமுகம் செய்யபட்டுள்ளது. முன்பாக 1.0 லிட்டர் டர்போ பெட்ரோலில் மட்டும் கிடைத்து வந்தது.

1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் சன்ரூஃப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதே இதுவே முதல் முறை, முன்பாக 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5-லிட்டர் டீசல் என்ஜினுடன் மட்டுமே கிடைத்தது.

Kia sonet

கியா சொனெட் HTK+ வேரியண்டில் சன்ரூஃப் மட்டும் கூடுதலாக பெற்று மற்ற வசதிகள் 8.0-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் தொடுதிரையுடன் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, தானியங்கி ஏசி, வயர்லெஸ் ஃபோன் ப்ரொஜெக்ஷன், நான்கு ஸ்பீக்கர் மற்றும் இரண்டு ட்வீட்டர், ஆட்டோ ஹெட்லேம்ப், கீலெஸ் என்ட்ரி அண்ட் கோ, ரிவர்ஸ் கேமரா மற்றும் நான்கு ஏர்பேக்குகள் தொடர்ந்து உள்ளன.

83hp, 1.2-லிட்டர், 5-ஸ்பீடு மேனுவலுடன் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உள்ளது. 120ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 172 என்எம் டார்க் வழங்குவதுடன் 6 வேக ஐஎம்டி கியர்பாக்ஸ் மற்றும் 7 வேக டிசிடி மட்டுமே பெறுகின்றது.

1.5 லிட்டர் டீசல் இன்ஜின் கொண்ட மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற மாடல் 100 ஹெச்பி பவர் மற்றும் 240 என்எம் டார்க் வழங்குவதுடன் fixed-geometry-turbo நுட்பத்தை கொண்டு 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. அடுத்தப்படியாக, 6 வேக டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் மாடல் variable-geometry பெற்று 115 ஹெச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் வழங்குகின்றது.